ஐ.ஒ இல் இலங்கை மீதான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
இலங்கை குறித்து கடந்த ஒரு வருடமாக புலன் விசாரணை நடத்திய ஐரோப்பிய ஆணையம் தனது அறிக்கையை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டிருந்தது. அதில் இலங்கை மனித உரிமைகளை மீறியமை தெட்டத்தெளிவாக நிரூபிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது, எனவே ஐ.ஒ வழங்கும் ஏற்றுமதி வரிச்சலுகை ரத்துச் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டது.
இன்று கூடிய ஐ.ஒ பாராளுமன்றத்தில் இலங்கை மீதான தீர்மானங்கள் குறித்த வாதம் நடந்து அத்தீர்மானம் சற்று முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்த போது 60 வாக்குகள் தீர்மானத்துக்கு ஆதரவாக கிடைத்தன, எதிராக ஒரு வாக்கும் கிடைக்கவில்லை. மூன்று உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை இறுதி தீர்மானத்தில் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் குறித்து சேர்க்கப்பட்டிருந்த சில குறிப்புகளை அழிக்க வேண்டும் என ஒரு நா.உ கேட்டார். அவரது கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 1424
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக