வெள்ளி, 23 அக்டோபர், 2009

ஈழத் தமிழர்களுக்கு ஆயுதம் வழங்கி போராட்டத்தை தீவீரப்படுத்துவோம் ‐ நக்சல்

22 October, 2009 by admin

hmmவன்னிப் போருக்குப் பின்னர் அப்போர் குறித்தும், முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்கள் குறித்தும் உலகெங்கிலும் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கணபதி இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியுள்ள நேர்காணலில், முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களை விடு விக்காவிட்டால் நாங்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி ஈழ விடுதலைப் போரை முன்னெடுக்க உதவுவோம் என்றிருக்கிறார்

கணபதி மேலும், உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை அரசு கம்பிவேலிக்குள் அடைத்து சித்திரவதை செய்வதை அறிந்து வேதனைப்படுகிறோம். அவர்களுக்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திரப் போராட்டத்தை தீவீரப்படுத்துவோம். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் வகுத்து வருகிறோம். அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் கொடூர சித்திரவதை செய்யப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதி நவீன படகுகள் மூலம் கடல் வழியாக ஆயுதங்களை இலங்கைக்குக் கொண்டு செல்வோம்.இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் இலங்கை இராணுவத்தினர் அங்குள்ள பெண்களை பாலியல் வன்முறை செய்யமாட்டார்கள். இளைஞர்களையும் சுட்டுக் கொல்ல மாட்டார்கள். எனவே எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை தமிழர்களுக்கு வழங்குவோம். சித்திரவதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆயுத உதவி செய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இதற்கென்று தனிக் குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம். எங்களது நக்சலைட் இயக்கத்தில் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த நிறைய இளைஞர்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்காக தமிழகம் கேரளா எல்லைப் பகுதிகளில் விரைவில் முகாம்கள் அமைப்போம். நாங்கள் தற்போது மேற்குவங்கம், ஒரிஸ்ஸா, பீகார்,ஜார்காண்ட், மாநிலங்களில் பலத்துடன் உள்ளோம். தென் மாநிலங்களில் எங்கள் அமைப்பை பலப்படுத்தும் பணியை தீவீரப்படுத்தியிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். மக்களை தொடர்ந்தும் அடைத்துவைத்திருப்பதன் மூலம், திரும்பவும் ஒரு ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என அமெரிக்க எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 7834

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக