ஞாயிறு, 18 அக்டோபர், 2009

தண்ணீருக்கு அடியில் மாலத்தீவு அமைச்சரவைக் கூட்டம்



மேல், அக்.17- உலக வெப்பமயமாதல் பிரச்னையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அமைச்சரவைக் கூட்டத்தை தண்ணீருக்கடியில் நடத்தியதுள்ளது மாலத்தீவு.

அதிபர் முகமது நஷீத் தலைமையில் தலைநகர் மேல் நகரில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டம் 30 நிமிடங்கள் நடைபெற்றது.

மேல் நகரில் கடற்கரைப் பகுதியில் தண்ணீருக்கடியில் சுமார் 20 அடி ஆழத்தில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்காக விசேஷ மேஜைகள், பேனா, காகிதங்கள் ஆகியவை தயார் செய்யப்பட்டிருந்தன.

இக்கூட்டத்தின் முடிவில் கரியமில வாயுவை உலக நாடுகள் குறைக்க முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதில், மொத்தமுள்ள 14 அமைச்சர்களில் 11 பேர் கலந்துகொண்டனர். இருவருக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. மற்றொருவர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

கருத்துக்கள்

aiming for guinness.. anyway best of luck

By sundaravadivelu
10/17/2009 10:36:00 PM

நம்ம ஊர்ல இதெல்லாம் சாத்தியமா?

By Nanban
10/17/2009 9:08:00 PM

hi it's a very good news we like this news

By Eal
10/17/2009 8:48:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக