கொழும்பு, அக். 18: பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக ஸ்திரமற்ற நிலை நிலவுவதாக இலங்கை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த கூறியதற்கு பாகிஸ்தான் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக ஸ்திரமற்ற, குழப்பமான நிலை நீடிப்பதாக பிரேமஜெயந்த கூறியதாக டெய்லி மிர்ரர் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டது. பாகிஸ்தானில் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த ஜியா உல்-ஹக், ஜுல்பிகர் அலி புட்டோவிடம் இருந்து 1977-ல் ஆட்சியைக் கைப்பற்றினார். அன்று முதல் பாகிஸ்தானில் ஸ்திரமற்றநிலை தொடங்கி இந்த நிமிடம் வரை நீடித்து வருகிறது. பாகிஸ்தானில் எந்த இடத்திலும், எந்த நிமிடமும் குண்டு வெடிக்கலாம், பயங்கரவாதிகள் தாக்கலாம் என்ற அச்சமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேறி சுதந்திரமாக நடமாடுவது என்பதுகூட பாகிஸ்தான் மக்களுக்கு சாத்தியமில்லை. பாகிஸ்தானை ஆட்சி செய்த எந்த ஒரு தலைவராலும் அந்நாட்டில் அமைதியை நிலைநாட்டி, ஸ்திரமான நிலையை உருவாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இது ஒருபுறமிருக்க, அங்கு நிலவும் ஸ்திரமற்ற தன்மையால் நாட்டின் பொருளாதாரமும் நசுங்கிக் கிடக்கிறது. இதுவும் அந்நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தங்களது நாட்டில் இதுபோன்ற மோசமான சூழல் நிலவுவதை பாகிஸ்தான் மக்கள் துளியும் விரும்பவில்லை என்று பிரேமஜெயந்த கூறியதாகவும் டெய்லி மிர்ரர் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பிரேமஜெயந்த தங்களது உள்நாட்டு விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்துள்ளது பாகிஸ்தான் தலைவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரேமஜெயந்தவின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவு துணை அமைச்சர் மாலிக் அமத் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாலிக் அமத் கான் சன்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பிரேமஜெயந்தவின் கருத்து அர்த்தமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். புலிகளை ஒடுக்க ஜியா உல்-ஹக் ஆட்சிக் காலத்தில் இருந்தே பெருமளவு ஆயுத உதவி செய்த தங்களை விமர்சிப்பதா என்றும் அவர் கூறியுள்ளார். நினைத்ததையெல்லாம் பேசியுள்ள பிரேமஜெயந்த, பாகிஸ்தானின் ராணுவத் தலைவர்கள் ஆட்சியில்தான் இலங்கை அதிகப் பலனை அடைந்தது என்பதை மறந்திடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்க ஆரம்பத்தில் இருந்தே இலங்கை அரசுக்கு ஆயுதங்களை அள்ளி அள்ளிக் கொடுத்து வந்தது பாகிஸ்தான். இதுதவிர்த்து, இலங்கை கேட்டபோதும், கேட்காத போதும் நிதி உதவியையும் அளித்து அந்நாட்டுடன் தாங்கள் நெருக்கமாக உள்ளதை இந்தியா உணர்ந்து கொள்ளும் விதத்தில் நடந்து கொண்டது பாகிஸ்தான்.
கருத்துக்கள்
பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஈவிரக்க மின்றிக் கொன்ற நீங்கள் உங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சாகுங்கள்! கண்டனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 3:38:00 AM
10/19/2009 3:38:00 AM
2009ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த காமெடி சுவரொட்டி.இலங்கைத் தமிழர்களுக்கு 4 நாட்களில் விடுதலைப் பெற்றுத் தந்த கலைஞருக்கு பாராட்டு /செருப்பால் அடிக்கனும் கெலைஞருக்கு.usanthan
By usanthan
10/19/2009 1:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/19/2009 1:37:00 AM