புதன், 21 அக்டோபர், 2009

23-ல் ஜெர்மனியில் தமிழ் இணைய மாநாடு



சென்னை, அக். 20: தமிழ் இணைய மாநாடு வரும் அக்டோபர் 23-ம் தேதி ஜெர்மனியில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் தமிழ் தகவல் தொழில்நுட்பம் குறித்த இன்றைய சாதனைகளையும், எதிர்கால சவால்களையும் அறிஞர்கள், வல்லுநர்கள் கூடி விவாதிக்க உள்ளனர்.
ஜெர்மனியில் உள்ள கோலென் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடக்கும் இந்த மாநாடு ஐரோப்பா கண்டத்தில் முதல் முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
""கணி வழி காண்போம் தமிழ்' என்பதே இந்த மாநாட்டின் மையக் கருத்தாக இருக்கும். அதாவது அனைவரும் தமிழில் கணினியை பயன்படுத்தவும் இணைய வழிக் கல்வி கற்க வகை செய்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்' என்று சுவிட்சர்லாந்தில் வசிக்கும் உத்தமம் அமைப்பின் தலைவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் தமிழக அரசு பிரதிநிதியாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். மேலும் கணித்தமிழ் சங்கத் தலைவர் ஆண்டோ பீட்டர், தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் நக்கீரன் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் இருந்து கலந்து கொள்கின்றனர்.

கருத்துக்கள்

மாநாடு வெற்றி பெற தினமணி வாசகர்கள் சார்பாக வாழ்த்துகள். கணிணிக் கலைச் சொற்கள் குறித்த கட்டுரையை நான் இம் மாநாட்டில் அளிக்க உள்ளதால் கட்டுரையாளர் என்ற முறையில் வாழ்த்துவோருக்கும் செய்தியை வெளியிட்ட தினமணிக்கும் நன்றி.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/21/2009 2:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக