சனி, 11 ஜூலை, 2009

தலையங்கம்:
வாளாவிருத்தல் நியாயமில்லை!சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களாலும் ஆட்டுமந்தையைப்போல இலங்கையிலுள்ள முகாம்களில் அடைபட்டு அல்லல்படும் ஏறத்தாழ மூன்று லட்சம் பேர்களின் பரிதாப நிலைக்காக நாம் ரத்தக் கண்ணீர் வடிப்பது, அவர்கள் தமிழர்கள் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களும் மனிதர்கள் என்பதால்தான். எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு இனத்திற்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்காகக் குரலெழுப்பவும், அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் நமக்குக் கற்றுத் தந்தவர்கள் அன்னிய நாட்டுப் போராளிகளோ, மேதாவிகளோ அல்ல. நமது தேசப்பிதா மகாத்மா காந்தி! அங்கே அடுத்த வேளைச் சாப்பாடு கிடக்கட்டும், வறண்டுபோன தொண்டையின் தாகம் தீர்க்கத் தண்ணீர்கூடக் கிடைக்காமல், இயற்கையின் அழைப்பை எதிர்கொள்ள இடமில்லாமல், ரணத்தின் வேதனையிலிருந்து நிவாரணம் பெற வைத்திய வசதி பெற முடியாமல் தவிக்கும் மூன்று லட்சம் பேர்களும் ஆறு அகதிகள் முகாமில் அடைந்து கிடக்கிறார்கள். அவர்களது நிலைக்குப் பரிதாபப்படாமல், இந்தியாவிலுள்ள அகதிகள் முகாம்களைவிட நேர்த்தியாகவும், வசதியாகவும் இலங்கை அரசு அந்த முகாம்களை நிர்வகிக்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கத் தமிழக ஊடகங்களே தயாராகிறதே, அதுதான் விசித்திரமாக இருக்கிறது. மூன்று லட்சம் பேர். ஆறு முகாம்களில் - சுமார் 85,000 குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து கையறு நிலையில். இவர்களை செல்வச் செழிப்பான அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளால்கூட வசதியாகப் பராமரிக்க முடியாதே, அப்படி இருக்கும்போது, இந்த அகதிகளுக்கு உண்ண உணவும், நோய்க்கு மருந்தும் கொடுக்க வழியில்லாமல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் கையேந்தும் இலங்கை அரசு மகிழ்ச்சியாகவும், நேர்த்தியாகவும் முகாம்களில் சகல வசதிகளுடன் பராமரிக்கிறது என்று நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார் காதில் பூ சுற்ற நினைக்கிறார்கள்? யாருக்குத் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்? பிரபல பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தனது கபட நாடகங்களுக்கு, உலக அரங்கில் அங்கீகாரம் தேடும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதும், அதற்கு நம்மவர்கள் சிலரேகூடத் துணை போகிறார்கள் என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். அங்கே தமிழ் ஈழ அகதிகள் முகாம்களின் உண்மை நிலைதான் என்ன? வட இலங்கையில் வவுனியா பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு ஆறு முகாம்களில் கம்பி வேலிகளுக்குள்ளே இந்த அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுற்றிலும் ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் இவர்கள் வெளியில் சென்றுவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 10,000-க்கும் அதிகமான தாற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் அதில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முறையான கழிப்பறை வசதிகள் கிடையாது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் வசதி கிடையாது. வயிறு நிறைய உண்ண உணவு கிடையாது. மருத்துவ வசதியும் முழுமையாகக் கிடையாது. 13,000 அகதிகள் இருக்கும் முகாமில் எட்டு மருத்துவர்களும், நான்கு செவிலியர்களும், போராட்ட பூமியிலிருந்து காயங்களுடன் கதறித் துடிக்கும் அகதிகளுக்கு என்னதான் மருத்துவ உதவி அளித்துவிட முடியும்? உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் வர்ணிக்கப்படும் செடிக்குளம் முகாமின் நிலைமை அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறுவது நாமல்ல, சரத்நந்த சில்வா என்கிற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. அவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபை செயலர் பான்கி-மூன் இதையே வருத்தப்பட்டுத் தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணுவத்தைவிடக் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்திய ராணுவம் திறமை வாய்ந்தது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் அடுத்த ஒரே மாதத்தில் கண்ணி வெடிகளை அகற்றவும், அகதிகள் முகாம்களைப் பராமரிக்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும். அதற்கு இந்திய அரசு வற்புறுத்தவும் வேண்டும். முகாம்களில் அடைந்து கிடப்பவர்கள் அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பாதவரை, நாளும் பொழுதும் செத்து மடியும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம்தான் இருக்கும். ராணுவம் முற்றிலுமாக அகன்று, பொது நிர்வாகம் செயல்பட்டால்தான் சகஜ வாழ்க்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரும்பப் போகிறது. அதற்குப் பிறகுதான், ஈழத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்பதையும், அரசியல் தீர்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் யோசிக்க முடியும். இதுதான் யதார்த்த உண்மை. நீங்கள் நிதி உதவியும், பொருள் உதவியும் தாருங்கள். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற இலங்கை அரசின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவதிப்படும் அகதிகளுக்கு உதவ இந்திய அரசு முன்வந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மலரப் போகிறது. இனியும் நாம் வாளாவிருந்தால் நியாயமல்ல! நம்மை வழி நடத்துவது "காந்தி'தானே? மகாத்மா காந்திதானே?
கருத்துக்கள்

சிறந்த ஆசிரியருரைக்கு விருதுகள் வழங்குவதாயின் இவ்வுரைக்குத்தான் இவ்வாண்டு வழங்கப்பட வேண்டும். 'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்' என்பனவற்றை வெற்று முழக்கமாகக் கொள்ளாமல் இலக்காகக் கொண்டு இவ்வுரை அமைந்துள்ளது. ஆசிரியவுரையே தன்னிறைவாக உள்ள போது, ஊடகத் தரகர்கள் பற்றி நான் வேறு எழுத வேண்டிய தேவையில்லை. ஆனாலும தூங்குவது போல் நடிக்கும் இந்திய, தமிழக அரசுகள் கேளாக் காதினராகத்தான் இருக்கும். மக்கள்தாம் விழித்து எழுந்து அவர்களின் செவிகளில் விழச் செய்ய் வேண்டும். அல்லது அவர்களை வீழச் செய்ய் வேண்டும். மக்கள் எழுச்சியால் வீழாத அரசு எதுவும் உண்டா? ''சொந்த நாட்டில் பரர்க்கு அடிமை செய்தே துஞ்சிடோம் - இனி அஞ்சிடோம்!'' என வாழும் தமிழ் மக்களை நாளும் அழிக்கும் அரசுகள் வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை. உலக மக்களே தினமணி உரையை உணர்ந்து எழுச்சி கொள்வீர்! வாழ்க மனித நேயம்! வெல்க தமிழ்ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/11/2009 4:02:00 AM

heartly thanks for dinamani to publish srilankan tamil issue

By kannan
7/11/2009 3:41:00 AM

HEART IS BURSTING. OH MOTHER NATURE KINDLY SHOW YOUR LOVE AND PEACE FOR THE POOR SUFFERING SL TAMILS OR ANY ONE SUFFERING SUCH GENOCIDE IN THE WORLD. WHY IS THIS SUFFERING FOR SL INNOCENT TAMILS.

By tamizhan
7/11/2009 3:34:00 AM

பொய்ச் செய்திகள் போட்டு தனது அரிப்பை வெளிப்படுத்திய இந்து ராம் ஒரு முற்போக்குவாதியாம்? சீனசார்பு மார்க்ஸ்சிஸ்ட் எனச் சொல்கிறார்கள். சிறிலங்காவுக்கு வக்காலத்து வாங்குவது போலவே சீனாவுக்கும் வக்காலத்து வாங்குவது இந்து ராமின் முழுநேரத் தொழில். இதைவிட வெட்கக் கேடு வேறு இருக்க முடியாது. தமிழர்கள் கொட்டிய குருதி மகிந்த வடித்த கண்ணீர் இராசபக்சேயின் கைகளில் மட்டுமல்ல அவரோடு விருந்துண்டு மகிழ்ந்த இந்து ராம் கைகளிலும் தாராளமாகப் பூசப்பட்டிருக்கிறது. தமிழக தமிழர்கள் இந்து ராமுக்கு தக்க பாடம் படிப்பிக்கிறார்கள் இல்லையென்பதுதான் எமது ஆதங்கம். இப்படியான ஒரு எட்டப்பனை புறங்கட்டாது எப்படி விட்டு வைத்துள்ளார்கள்?

By Keeran
7/11/2009 3:04:00 AM

26-12-2004 அன்று வீசிய சுனாமி யின்போது பிரபாகரனும் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டுஅம்மானும் பேரலைகளால் அடித்துச்செல்லப்பட்டதாகவும் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை யென்றும் ஒரு பரபரப்பான செய்தியை இந்து நாளிதழ் வெளியிட்டது. பிரபா கரனுக்காக விலைஉயர்ந்த சவப்பெட்டி ஒன்று தமிழ்ப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இந்து இதழ் கூறியது. அதுமட்டுமல்ல இலங்கைக் கடற்படையின் வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி, பிரபாகரனும் பொட்டு அம்மானும் சுனாமி அலைகளில் கொல்லப்பட்டார்கள் என்று அறிவித்தார். முன் பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டு மகிழ்ந்த இந்து நாளிதழ் விடுதலைப் புலிகளின் சார்பில் வெளி யிடப்பட்ட மறுப்பு செய்தியை பிரசுரிக்கவே இல்லை. ஆனால் 10 நாட்கள் கழித்து நோர்வே நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்பீட்டர்சன் கிளிநொச்சியில் பிரபாகரனைச் சந்திக்கும் படத்தை இந்து வெளியிட்டது. பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறியதற்கு வருத்தம்கூட தெரிவிக்கும் நாணயம் இந்து இதழுக்கு இருக்கவில்லை. இவ்வாறெல்லாம் பிரபாகரனை மாத்தையா சுட்டுவிட்டார். அவரது சடலம் ஊர்வலாமாக எடுத்துச் செல்லப்படுகிறது என்று பொய்ச் செய்திகள் போட்டு த

By Keeran
7/11/2009 3:02:00 AM

உங்கள் தலையங்கத்துக்கு எமது பாராட்டுக்கள். ஆனால் இவற்றை எல்லாம் யார் படிக்கப் போகிறார்கள்? யார் காதில் போடப்போகிறார்கள்? தமிழக முதல்வரே எந்த வெட்கமோ துக்கமோ இன்றி சிங்களவனுக்கு கோபம் வராத வகையில் நீக்குப் போக்காக நடந்து கொள்ள வேண்டும் என்று திருவாய்மலர்ந்துள்ளாரே? இந்து இராம் கடந்த பத்து ஆண்டுகளாக வி.புலிகளைக் கொச்சைப் படுத்துவதையே தனது முழுநேர வேலையாக வைத்திருப்பவர். ஒருமுறைக்கு இருமுறை உயிரோடு பிரபாகரனைச் சாகடித்த பெருமையும் அவரைத்தான் சாரும். 25-7-89 அன்று ஒரு திடுக்கிடும் செய்தியை இந்து வெளியிடப்பட்டது. புலிகள் இயக்கத் துணைத் தலைவர் மாத்தையாவிற்கும் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டிருப்ப தாகவும் இந்து சொல்லியது. வடக்கு கிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வரதராசப் பெருமாள், பிரபாகரன் இறந்த செய்தியை உறுதிசெய்தார்.ஆனால் 2 நாட்களில் இச்செய்தி யில் கொஞ்சம் கூட உண்மையில்லை – பிரபாகரன் உயிரோடு நலமோடு இருக்கிறார் என்பது

By Keeran
7/11/2009 2:59:00 AM

very very thanks for your editorial.Only medias can turn the leaders on innocent Tamils' 'HORRIBLE' lives in tortured Nazi's concentration camps in Vanni.People in Vanni never sent back visitors without giving food and milks, even Jaffna Tamils can't afford to do this.Unfortunately, Todays message is very sad that cooked food contractors refused to give the foods because government did not paid their expenditure so they spent it.Look like 300 thoousan people now in hungry and thirsty.Only reason They only born as Tamils and They speak only Tamil and They follow Tamil cultures.Still are we living in 21 th cetury?? Used to be king now dishwasher

By Thamilan
7/11/2009 2:24:00 AM

TO WHOEM YOU ARE TELLIN HIS?EVRYTHING IN SL IS BEING DONE BY INDIAN ADVICE,AFTER ALL TAMILS NADU SLAVES ARE PREPARE TO SELL THEM FOR MONEY INCLUDING THE LEADERS.LET THE TAMILS DIE QUIETLY,LET THE ITALINA MONSTER BE HAPPY,LET THE BILLION SHEEPS WORDHIP HER.BUT ONE THING IS CLEAR THIS TEARS OF TAMILS WILL ONE DAY DESTROY INDIA.

By DANDY
7/11/2009 2:23:00 AM

Yaru enna sonnalum ethum nadakka povathu illai.Ingu america-il oru nayai-i(dog) kondratharkku,oru varudam jail thandanai kodukkirarkal.Anal eelathilo tamilanai kondral,tamil pennai tharugirarkal.. Tamilan endru sollada,,thalai kuninthu nillada.LTTE eelathil potta sandayai,chennai-il pottu irunthal,vidivu kidaithurukkum

By Anbu
7/11/2009 2:21:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக