புதன், 8 ஜூலை, 2009

முழுச் செ ய்திக்கும் கருத்துளுக்கும்
பின் வரும் வரியைச் சொடுக்கவும்
:
'''பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்'''' என்பது இதுதானோ! இப்பபடி ஓர் அருமையான மடலை யாரும் எழுதியிருக்க முடியாது. இந்தியாவின் நிலைப்பாட்டைத் தமிழக அரசு எதிர்க்கவில்லை. எதிர்ப்பதாக எண்ணி அன்னையே எம் குடும்பத்தவரின் அமைச்சர் பதவிகளுக்கு வேட்டு வைக்க வேண்டா. தறி கெட்டத் தமிழர்கள் இன்னும் என்னை நம்புகிறார்கள். எனவேதான் '''' இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கருதப்படுகிறது'''' என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். என் கருத்து என்ன வென்று நான சொ்லல வில்லை. உங்களுக்குத் தெரியாதா! உங்கள் கருத்துதான் அடியேன் கருத்தும் என்று. எப்படி ஈழத் தமிழர்கள் போதிய உணவு வசதி, மரு்நது வசதி. மின் வசதிகூட இல்லாமல் படும் அல்லல்களைத் துடைப்பதற்காக ''இருந்தால்தான் சிக்கல் என்று'' வீர மரணம் என்னும் பேற்றினை அளித்த அன்னையே! இப்பொழுதும் அதே போன்று உரிய நடவடிக்கை எடுத்தால் போதும்!


மற்றபடி இந்த அடிமைகள் ஏதோ பிழைத்துப் போகட்டும் என்று பதவி எலும்புகளைத் தவறாமல் தூக்கி எறியுமாறு மெத்த பணிவன்புடன் வேண்டுகிறேன். தாயே! இதுகூடத் தவறு என்று சொன்னால். உடனே இதை மறுத்து மற்றொரு மடல் அனுப்புகின்றேன். பொறுத்தருளுங்கள் தாயே! பொங்கி எழ வேண்டா! தங்கள் அடிமை மு.க. --சே! சே! கனவுதான். - இலக்குவனார் திருவள்ளுவன்
by I. Thiruvalluvan,India
Posted on மே 27,2009,04:06 IST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக