புதன், 8 ஜூலை, 2009

புலிகள் ஒத்துழைத்திருந்தால்
சேதங்களை தவிர்த்து இருக்கலாம்: இலங்கை தூதர்
தினமணி


சென்னை, ஜூலை 7: விடுதலைப் புலிகள் ஒத்துழைப்பு அளித்திருந்தால், இலங்கை இனப் பிரச்னைக்கு முன்பே தீர்வு ஏற்பட்டிருக்கும். பெருமளவு சேதங்களையும் தவிர்த்திருக்கலாம் என இந்தியாவுக்கான இலங்கை தூதர் ரொமேஷ் ஜெயசிங்கே தெரிவித்தார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் "போருக்கு பிந்தைய இலங்கையும், இந்தியாவின் பங்களிப்பும்' என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்துக்கள்

1/2) ஆமாம். புலிகள் ஒத்துழைக்கத்தவறி விட்டார்கள்.அமைதிப் பேச்சிற்காக வெண்கொடி ஏந்தி வந்து வஞ்சமாகவும் வன்முறையாகவும் கொல்லப்பட்டட அரசியல் பிரிவினர் போல் அனைவரும் தாமாக முன்வந்து சரணடைந்திருந்தால் புலிகளையும் புலிகள் என்ற பெயரில் தமிழர்களையும் கொன்றிருப்பார்கள். எரிகுண்டுகள் வீசி தமிழ் ஈழப்பகுதியைத் தரைமட்டமாக ஆக்கியிருக்கமாட்டார்கள். இலங்கையில் இருப்பது ஒரே இனம் - அது சிங்கள இனம்; இலங்கையில் இருப்பது ஒரே மொழி - அது சிங்கள மொழி; இலங்கையில் இருப்பது ஒரே சமயம் - அது 'யுத்த வெறி பிடித்த' புத்தசமயம்; என ஏற்றிருந்தார்கள் எனில், அனைவரையும் எந்தச் செலவுமின்றி அழித்திருந்திருப்பார்கள். ஒரே இனம் மட்டும் இருந்திருந்தால் இனச் சிக்கல் வந்திருக்காதே! 'போருக்கு முந்தைய இலங்கையில் இந்தியாவின் பங்களிப்பே மிகுதி; போருக்குப் பிந்தைய இலங்கையில் 'இந்தியாவா? எங்கே உள்ளது?' என்பதுதான் சிங்களர் நிலை' என்பதை விளக்கத் தேவையிருந்திருக்காது. (தொடர்ச்சி 2/2 காண்க)


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/8/2009 3:41:00 AM
2/2) (1/2 இன் தொடர்ச்சி) கொலைகாரக் கும்பலைக் கூப்பிட்டு பசுத்தோல் போர்த்திய சிங்கத்தின் கதையைக் கேட்ட அறிவாளி யார்? எல்லா அறநெறி வழிக் கோரிக்கைகளும் பயனற்று போனபின் தற்காப்பில் இறங்கிய - சிங்கள மக்கள் மீது குண்டு வீசாமல், தம் மக்களைக் காப்பாற்ற மட்டும் கருவிகளைப் பயன்படுத்திய ஈழத் தமிழர்கள் சார்பாக யாரையும் அழைத்திருக்க வேண்டாவா? காலம் விரைவில் மாறும்! தமிழ் ஈழம் உலகில் வெல்லும்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/8/2009 3:41:00 AM


சாத்தான் வேதம் ஒதுக்கிறது. அறவழிப் போராட்ட காலத்தில் பிரச்சனையை முடித்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றி இருக்காதே.

By Patrick
7/7/2009 10:12:00 PM

சாத்தான் வேதம் ஒதுக்கிறது. அறவழிப் போராட்ட காலத்தில் பிரச்சனையை முடித்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றி இருக்காதே.

By Patrick@t-online.de
7/7/2009 10:00:00 PM

புலிகளை நீங்கள் ஆயுதத்தால் வென்றிருக்கலாம்;. புலிகள் வேறு, தமிழர்கள் வேறு! தமிழர்களை வெல்லமுடியுமா என்று பாருங்கள் உங்கள் அன்பினால்.

By Ravi
7/7/2009 9:33:00 PM

இப்படிப் பேசுவது அயோக்கியர்களுக்கு கைவந்த கலை. இதனால் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.

By செவ்வேலர்
7/7/2009 9:31:00 PM

Tamils genocide is being executed by India in Srilanka. If LTTE is accepted your idea, India would have completed tamils genocide by this time. That is the only different.

By A tamil slave from India
7/7/2009 9:27:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக