சீர்காழி, ஜூலை 6: நாகை மாவட்டம், சீர்காழியில் தமிழிசை மூவர் விழா சட்டைநாதர் திருக்கோயில் வளாக இசையரங்கில் திங்கள்கிழமை மாலை தொடங்கியது. விழாவை தமிழக பால் வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன் தொடக்கிவைத்தார். சீர்காழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
கருத்துக்கள்
கலைஞர் கடந்த முறை ஆட்சியில் இருந்தபொழுது சீர்காழி மூவருக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்து அடிக்கல் நாட்டப்படவும் வகை செய்தார். ஆட்சியில் இருந்தவரை மண்டபம் உருவாக ஒன்றும் செய்யவில்லை. ஆட்சி போனதும் இசைவேளாளர் மாநாட்டில் மூவரின் சிறப்பு அப்போதைய ஆட்சியில் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி மூவரின்புகழ் பரவ நாடெங்கும் விழா கொண்டாடுதல், மணி மண்டபம் எழுப்பல் முதலான குறித்தும் பேசினார். மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார். எனினும் மணிமண்டபப் பணி தொடக்க நிலையிலேயே உள்ளது. தமிழிசையில் ஆர்வம் காட்டும் கலைஞரின் ஆட்சியிலேயே இத்திட்டம் ஊறப் போடப்பட்டது எனில் யார்தான் ஆர்வம் காட்டுவர்? குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்று சீர்காழி சட்டநாதர் கோயிலுக்குள் மட்டும் மூவர் விழாவைக் கொண்டாடி என்ன பயன்?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 4:34:00 AM
7/7/2009 4:34:00 AM