செவ்வாய், 7 ஜூலை, 2009

பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்வது சரிதானா?:
அமைச்சர் கேள்வி
தினமணி


சென்னை, ஜூலை 6: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்வது சரிதானா என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்து
''மக்களாட்சி முறையில் கிளர்ச்சிகள் என்பன குறைகளைத் தெரிவிக்கும் ஒரு கருவி. ஆட்சியாளர்கள் கிளர்ச்சியாளர்களை ஒடுக்காமல் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைய வேண்டும்'' என்றார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள். எனவே, பயிற்சி மருத்துவர்களின் குறைகளைக் களையாமல் அவர்கள் போராட்டத்தை நாடும் வகையில் நடந்து கொண்ட அரசு மீதுதான் குற்றமே தவிர, பயிற்சி மருத்துவர்கள் மீதன்று. தனியாருடன் ஒப்பிடாமல் முன் மாதிரியாக அரசு இருக்க வேண்டும். வரிப்பணம் செலுத்தப்படுவது அரசிற்கேயன்றித் தனியாருக்கு அல்ல. எனவே, ஏட்டுப் படிப்பை முடித்து விட்டு நாட்டுப் பணியைத் தொடங்கும் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொகையைப் பிச்சையாகக் கருதாமல் உழைப்பிற்கான ஊதியமாகக் கருதுவதே முறையாகும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 3:50:00 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக