First Published : 04 Jul 2009 11:19:00 PM IST
Last Updated :
சென்னை, ஜுலை 3: காலியாக உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் 3 மாதத்தில் நிரப்பப்படும் என்று மின்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அறிவித்தார்.
By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2009 4:18:00 AM
7/5/2009 4:18:00 AM
2/2) [1/2 தொடர்ச்சி] உண்மையிலேயே அரசிற்குப் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதில் ஆர்வம் இருந்தது எனில் தவறாக நிரப்பப்பட்ட நியமனங்கள் அனைத்தையும் நீக்கம் செய்து பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு அவ்வாறு செய்யுமா?
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2009 4:18:00 AM
7/5/2009 4:18:00 AM
1/2) பல்வேறு நேர்வுகளில் அரசின் அறிவிப்புகளுக்கும் நடைமுறைச் செயல்பாடுகளுக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளமை களையப்பட வேண்டும். பின்னடைவுப்பணியிடங்களைப் பற்றிய அறிவிப்பும் அத்தகைய ஏமாற்று வேலையே! எடுத்துக்காட்டாகக் இசைப்பள்ளிகளிலும் இசைக்கல்லூரிகளிலும் ஒருவர் கூட ஆதிதிராவிடர் - பழங்குடியினர் வகுப்பாக இன்மையால் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பிய பின்புதான் பிற பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு ஆணையிட்டது. ஆனால், பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் வேறு ஒரு வகுப்பாருக்கு முதன்மை அளிக்கும வகையில் பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இனி பணியிடங்கள் காலியாகவே - நியமிக்கப்பட்டவர்கள் ஓய்வு அடையும் வரை - பல ஆண்டுகள் ஆகும். மீண்டும் பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் வேண்டியவர்களுக்கு வேண்டிய வண்ணம் வழங்கி விட்டு அதன் பின் சடங்காக இனிமேல் பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பியபின்பே பிற இடங்கள் நிரப்பப்படவேண்டும் என்ற ஆணை சடங்கு போல் வெளியிடப்படும். ஆக இவற்றால் என்ன பயன்? (தொடர்ச்சி 2/2 காண்க)
- இலக்குவனார் திருவள்ளுவன்