ஞாயிறு, 5 ஜூலை, 2009

நேபாளத்தில் அமைச்சரின்
இந்திப் பேச்சுக்கு எதிர்ப்பு
தினமணி


காத்மாண்டு, ஜூலை 5: நேபாளத்தில் அமைச்சர் இந்தியில் பேசியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நேபாளத்தைச் சேர்ந்த காம்பைன் கல்லூரியின் 90 சதவீத பங்குகளை கர்நாடகத்தைச் சேர்ந்த மணிப்பால் கல்விக் குழுமம் வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி காத்மாண்டுவில் இன்று நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில், தெராய் மாதேசி ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், கல்வி அமைச்சருமான ராமச்சந்திர பிரசாத் குஷ்வாஹா இந்தியில் பேசத் தொடங்கியவுடன் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைக் கண்டித்த அமைச்சர், "இதற்கு முன்னர் பேசியவர்கள் ஆங்கிலத்தில் பேசியபோது அமைதியாக இருந்தீர்கள். நான் இந்தியில் பேசும்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? தெராய் பகுதியில் பொது மொழியாக உள்ள இந்தியில்பேசுவதற்கு எனக்கு உரிமை உள்ளது' என்றார்.

கருத்துக்கள்

தெராய்பகுதியில் இந்தி இருந்தாலும் அவர் கலந்துகொண்ட பகுதியில் நேபாள மொழி இருக்கையில் நேபாளம் தெரியாவிட்டால் பொதுவான மொழியான ஆங்கிலத்தில் பேசலாமே! வீண் மொழிச்சிக்கலும் இந்தித்திணிப்பும் எதற்கு? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2009 7:33:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக