வியாழன், 9 ஜூலை, 2009

மரபணுக்கள் மூலம் தமிழர்களின் தோற்றம் குறித்து ஆராய்ச்சி

First Published : 09 Jul 2009 01:22:31 AM IST


சென்னை, ஜூலை 8: மரபணுக்களின் மூலம் தமிழர்களின் தோற்றம், வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப் போவதாக இந்திய தடயவியல் நிபுணர் பி. சந்திரசேகரன் கூறினார். இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: எனது நண்பரும், உயிரி தொழில்நுட்ப வல்லுநருமான ரிச்சர்டு ஃபெல்டுமேனுடன் இணைந்து இந்த ஆராய்ச்சியைத் தொடங்கவுள்ளோம். ஏற்கெனவே இது போன்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு மீண்டும் ஆராயும்போது புதிய, அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. எங்கள் ஆராய்ச்சிக்கு உதவும்படி தமிழக அரசை கேட்கவுள்ளோம். மரபணு மாதிரிகளைக் கொண்டு ஆராயும்போது பண்டைய கால தமிழ் மக்களுக்கு நீரழிவு நோய் இருந்துள்ளதா என்பது போன்ற சுவாரசியமான தகவல்களைப் பெற முடியும். இத்தகைய ஆராய்ச்சிகள் சமுதாயத்தில் முன்னேற்றங்களைக் கொண்டு வரும். நாங்கள் மத்திய அரசையும் தொடர்பு கொண்டு வருகிறோம் என்றார் சந்திரசேகரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக