செவ்வாய், 7 ஜூலை, 2009


ஜூலை 06,2009,22:53 IST





ஊட்டி ;இந்தியாவில் அகதிகளாக குடியேறி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை, ஊட்டியில் உள்ள திபெத்தியர்கள் கோலாகலமாகக் கொண்டாடினர்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன், சீன ஆக்கிரமிப்பை அடுத்து திபெத் மக்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். அவர்களில் ஒரு பகுதியினர் ஊட்டியில் அடைக்கலமாகினர். இங்கு, அவர்கள் மிகுந்த மரியாதையுடன் வாழ்ந்து வருகின்றனர்; ஊட்டியில், "திபெத் மார்க்கெட்' என்ற தனிப்பகுதியே உள்ளது.



திபெத் மக்களின் மதகுருவான தலாய்லாமாவின் 74வது பிறந்த நாள் மற்றும் திபெத்தியர்கள் இந்தியாவில் அகதிகளாகக் குடியேறியதன் 50 ஆண்டு நிறைவு ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக, திபெத்தியர்கள் நலச்சங்கம் சார்பில் ஊட்டியில் நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது.ஊட்டி ஒய்.பி.ஏ., அரங்கில் நடந்த விழாவில், கூடுதல் கலெக்டர் ஆபிரகாம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திபெத்தியர்கள் நலச் சங்கத் தலைவர் குங்யால் வரவேற்றார். தலாய்லாமா அனுப்பிய வாழ்த்துச் செய்தியை வாசித்தார் முன்னாள் தலைவர் டென்சிங் யாங்கி.பின், திபெத்தியர்கள் தங்கள் பாரம்பரிய நடனத்தை, வண்ணமிகு ஆடைகளுடன் ஆடிப் பாடினர். திபெத்தியர் நலச்சங்க துணைத் தலைவர் ஜங்சப் சங்மோ நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக