செவ்வாய், 7 ஜூலை, 2009

புலிகளின் தளபதி சொர்ணத்தின் மனைவி கைது
தினமணி


கொழும்பு, ஜூலை 6- விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மண்டலத் தளபதி சொர்ணத்தின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.இத்தகவலை காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.நலன்புரி முகாமில் தங்கியிருந்த அவரை போலீஸôர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் புலி ஒருவர் அளித்த தகவலின் பேரில் சொர்ணத்தின் மனைவி கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்கள்

1/2) திரு சீவா சீதர் எந்தத் தொனியில் எழுதியுள்ளார் எனத் தெரியவில்லை. ஆனால், இச்செய்தியைப் படித்ததும் மிகவும் வேதனையுற்று ஒன்றும் குறிப்பிட மனம் வரவில்லை என்பது உண்மைதான். மிகப் பல்லாண்டுகளாகத் தமிழ்ப் பெண்களை நாசம் செய்கின்ற, பெண்களின் மார்பில் சிங்கள முத்திரை பதித்துக் கொடுமைப்படுத்திய. தமிழர்களைக் கொன்று தமிழர்களின் கறி இங்கே விற்கப்படும் என்று விளம்பரப்படுத்திய, உயிருடன் இருக்கும் பொழுது கற்பழிப்பு முதலான கொடுமைகளைச் செய்வதுடன் இறந்தபின்பும் எழுத இயலாத கொடுமைகளை இழைக்கின்ற சிங்களக் கொடுங்கோலர்கள், வதைமுகாமில் இருந்து வேறு மிகுவன்கொடுமைக் கொட்டடிக்கு இழுத்துச் செல்கின்றனர் - நாட்டிற்காகப் பாடுபட்டவரின் மனைவியை! எதிரிதான் ஆயுதத்தைத் தீர்மானிக்கின்றான் என்பதற்கேற்ப சிங்கள பயங்கரக் கொடுமைகளுக்கு எதிராகத்தான் ஈழப்புலிகள் ஆயுதம் ஏந்தினர். எனினும் சிங்கள மக்களுக்கு எதிரான குண்டு வீச்சில் ஈடுபடவில்லை. பழிக்குப்பழி என்ற முறையில் சிங்கள மக்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தார்கள் எனில் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும்! (தொடர்ச்சி 2/2 காண்க)


- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 5:12:00 AM
2/2) (1/2 இன் தொடர்ச்சி) ஆனாலும் சிங்கள மக்களுக்கு எதிரான வன்முறைச் செயலில் இறங்கா அறவுணர்வுடன் செயல்பட்டவர்கள் விடுதலைப் போராளிகள். அவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கத் துணை நிற்க வேண்டிய நாமோ பேரவலப் பெருங்கொடுமைகளைச் செய்யும் மனித நேயமற்ற கையாலாகாதா அரசகளைத் தேர்ந்தெடுத்துவிட்டுக கையறுநிலையில் கதறுகிறோம்! மனம் வெதும்பிக் கண்ணீர் வடிக்கும் சூழலில் என்ன எழுதுவது?என்ன எழுதி என்னதான் பயன்?

வேதனையில் உழலும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 5:13:00 AM

Its really surprising that Ilakuvanar Thiruvalluvanar has not commented this article ;)

By Jeeva Sridhar
7/7/2009 3:09:00 AM

அன்று! இந்திய இராணுவம் இலங்கைத்தமிழ்ப் பெண்களை ஆயிரக்கணக்கில் கற்பழித்தார்கள் என்று எமது தமிழ்ப்பெண்களின் மானத்தை ஏலம் போட்டு விற்றார்கள். இன்று! அனைத்து புலித்ததைவர்களினதும் அப்பாவி மனைவிமார்கள் இலங்கை இராணுவத்தின் பிடியில். பழி எங்கோ போய்ச்சேர்ந்து விட்டது, பாவம் இங்கே அவர்களைக் திருமணம் செய்த குற்றத்திற்காக!

By Ravi
7/7/2009 2:10:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக