இணையம் வளர்ச்சி யடைந்துள்ள இக்காலக் கட்டத்தில் பழைய இதழ்களைப் பட வடிவிலாவது வெளியிடலாமே எனப் பலமுறை - பலமுறை என்பதை விட அன்றாடம் என்பது பொருத்தமாக இருக்கும் - எண்ணி வருகிறேன். பலரிடம் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். என்னைப் போன்ற கருத்துடைய எண்ணற்ற வாசகர்கள் மகிழும் வண்ணம் பழைய பதிவுகளைக் கொண்டு வரும் தினமணிக்குப் பாராட்டுகள். நேரு காலத்திலிருந்தே இருக்கும் சிங்கள அரசின் - சிங்கள மக்களின் - சின்ன புத்தியை உலகம் புரிந்து கொள்வது எப்பொழுது என்றுதான் தெரியவில்லை? புரிந்து கொண்டவர்களும் 'சிங்களர்கள் சீறக்கூடாது' என்றுதான் கவலைப்படுகிறார்களே தவிர, தம் மக்கள் நலன் குறித்துத்தான் நாளும் பொழுதும் எண்ணுகிறார்களே தவிர, அன்றாடம் மடியும் தமிழ் மக்கள் குறித்துக் கவலைப்படுவதில்லையே என்பதுதான் பேரவலத்தினும் பெரு்ந்துன்பமாக உள்ளது. இவர்களை உணர்த்தித் திருத்தும் ஒரு படையாய் இளையவர்களேனும் புறப்படட்டும்! வாழ்க தினமணியின் தமிழ்த் தொண்டு! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!
இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன் ---------
7/10/2009 5:26:00 PM
this is not a paper like as bond. nehru thirkatharisanam this words.nowadays some poltiticians not now this matter.
7/10/2009 4:25:00 PM