கையால்
ஆகாதபொழுது கானா மிரட்டுவதுபோல் எழுதுகிறீர்களே! நூறாயிரக்கணக்கான தமிழர்களைக்
கொன்ற பொழுது ஏற்படாத அச்சம் சிங்களவனுக்கு இன்னும் இருக்கும் பொழுது
அவனுக்கு அச்சத்தை உணர்த்த, எதிர்ப்பு உணர்வை இயல்பாகக் காட்டுவதைத் தவறு என்கின்றீரகளே! தமிழ்நாட்டிற்கும் பிற பகுதிகளுக்கும் சென்றால்,
சிங்களன்
நிலை என்னாகும் என்ற அச்சம் அவனுக்கு இல்லையே! உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஈவிரக்கமின்றிக் கொன்றவனை நீங்கள் வரவேற்று விருந்தோம்பினால்
உங்களைப் பிறர் இழிவாகக் கருதமாட்டார்களா? அல்லது
அப்படிப்பட்ட உறவினரை நீங்கள் எள்ளி நகையாடமாட்டீர்களா? துயர உணர்வின் வெளிப்பாட்டைக கொச்சைப்படுத்தும் சத்தியமூர்த்தி
போன்றவர்களின் கருத்துகளை வெளிப்படுத்தித் தரம் தாழ்த்திக்கொள்ள வேண்டா. துயர
உணர்வில் கொந்தளித்துப் பீறிட்டு எழும் உணர்வாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில்
அறிவுரை கூறுங்கள்.
ஆனால், இவ்வாறு அவர்களின் செயலுக்குக் களங்கம் கற்பிக்காதீர்கள்! எமை
நத்துவாய் என எதிரிகள் கோடி
இட்டழைத்தாலும் தொடேன் என்ற பாவேந்தரின் வரிகளுக்கிணங்க நடப்பவர்களிடம்
கொலைகாரனின் எச்சில் பண்டத்தை இரந்துண்டு வாழுமாறு கூறாதீர்கள்!
சிங்களர்களிடமிருந்து வரும் சுற்றுலாப் பணம் தேவையில்லை. சிங்கள அரசு பிற
நாடுகளின் உதவியின்றித் தனித்துவிடப்பட்டு அதற்குப்பிறகேனும் கொடுங்குற்றச் செயலை
உணர வேண்டு்ம். இனப்படுகொலைகாரர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அடைந்த
இன்னல்களுக்கும் இழந்த உறவுகளுக்கும் உடைமைகளுக்கும் ஈடாகவும் தமிழ் ஈழ மக்கள்
விடுதலை அடைந்து தனியரசு அமைத்துக் கோலோச்ச வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக்
காப்போம்! இனத்தைக் காப்போம்!/
தினமலர் வேறு எப்படி செய்யும் ? உன் வீட்டுப் பெண்ணைக் கற்பழித்துக் கொன்றால், குழந்தைகளை அழித்தால் கை காலை வெட்டி வீசி எறிந்தால் இப்படி எழுதுவாயா ? தமிழன் வீட்டுக் காசு உனக்கு வேணும். நம் மொழி பேசிக்கொண்டே நம்மை ஒழிக்க நினைக்கும் குள்ள நரிக் கூட்டத்தின் கூக்குரலே இது ! வருத்தமும் இல்லை ! வியப்பில்லை ! நன்றி உனக்கு தினமலரே !தமிழரை ஒன்றுபடுத்தும் செயலே ! பல மறைமலையடிகள்,பாவாணர்கள், பெருஞ்சித்திர்னார்கள் இலக்குவனார்கள் உன்இழி சொல்லால் தோன்றுவர் ! ஆக நன்றி தினமலருக்கே !
பதிலளிநீக்குஆனால் வாங்காதே !வாங்காதே !தினமலர் வாங்காதே !வாங்காதே !