இலங்கைக்கு எதிராக வாக்களித்தது இந்தியா : தீர்மானம் நிறைவேற்றம்
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா வாக்களித்துள்ளது.
இந்தியா உட்பட 25 நாடுகளின் பிரதிநிதிகள், இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கத் தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 25 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. பாகிஸ்தான், வெனிசுலா உட்பட 13 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் 8 நாடுகள் பங்கேற்கவில்லை. இதனால், பெரும்பான்மையுடன், இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தில் பெரிய திருத்தம் எதையும் கோராத இந்தியா நிலையில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா, 13வது அரசியல் சட்ட திருத்தத்தை இலங்கை அமல்படுத்த வேண்டும். இலங்கை தனது நம்பகத் தன்மையைக் காக்க வேண்டும். அதற்கு நம்பகத்தன்மை மிக்க விசாரணை தேவை.
இலங்கையில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு தேவை. வடக்கு மாகாண மக்கள் தேர்தலில் பங்குபெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது. இந்தியாவும், இலங்கையுடனான உறவைத் துண்டித்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
ஐ.நா., மனித உரிமைகள் ஆணையம் இலங்கை சென்று, உலக நாடுகள் ஏற்கும் வகையில் சுதந்திரமான விசாரணை நடத்தவேண்டும் என்று கூறினார். மேலும், அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திலிப் சின்ஹா. கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக