அமெரிக்க த் தீர்மானத்தை க் கடுமையாக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமையமைச்சருக்கு முதல்வர் மடல்
இலங்கைத் தமிழர் விவகாரத்தில், ஐ.நா. மனித உரிமைக்
கவுன்சிலில் அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தை இன்னும் கடுமையாக்கி அளிக்க
இந்தியா ஆவன செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்
எழுதியுள்ளார்.
இதுகுறித்த கடிதத்தில்,
தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் படும் அவதிக்கு எதிராக தமிழர்கள்
மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி குறித்து அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
இலங்கை அரசு, சர்வதேச உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல், நடந்து
கொள்கிறது. போர் சமயத்தில் இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்
நடவடிக்கைகளில் அது ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த நிலையில், இலங்கை
மீது கொண்டுவரப்படும் தீர்மான விவகாரத்தில் இந்தியா தனது நிலையை தெளிவாகத்
தெரிவிக்க வேண்டும்.
இலங்கை விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் கூறிய கருத்துகள்
கவலை அளிக்கிறது. இலங்கை விவகாரத்தில், வரலாற்று முக்கியத்துவமான இந்த
நேரத்தில் இந்திய அரசு, வெகு துணிச்சலான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
மேலும், சர்வதேச நீதிமன்றத்தில், இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து
சுதந்திரமான அமைப்பு 6 மாத காலத்துக்குள் விசாரணை நடத்தி, இலங்கையின் இன
அழிப்பு குறித்தும், ராஜபட்சவின் போர்க்குற்றம் குறித்தும் அறிவிக்கப்பட
வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் பொறுப்பைத் தர இலங்கை
நடவடிக்கை எடுக்க வழி செய்ய வேண்டும்.
ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில்
தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, அதனை இன்னும் கடுமையாக்க இந்தியா
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி முதல்வர் ஜெயலலிதா பிரதமர்
மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக