பெரிய கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரிய கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 மார்ச், 2013

தினமலரில் வந்த அபயக் கூக்குரல்!



கையால் ஆகாதபொழுது கானா மிரட்டுவதுபோல் எழுதுகிறீர்களே! நூறாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற பொழுது ஏற்படாத அச்சம் சிங்களவனுக்கு இன்னும் இருக்கும் பொழுது அவனுக்கு  அச்சத்தை உணர்த்த, எதிர்ப்பு உணர்வை இயல்பாகக் காட்டுவதைத் தவறு என்கின்றீரகளே!  தமிழ்நாட்டிற்கும் பிற பகுதிகளுக்கும் சென்றால், சிங்களன்  நிலை என்னாகும் என்ற அச்சம் அவனுக்கு இல்லையே!  உங்கள் குடும்பத்தில்  உள்ள அனைவரையும் ஈவிரக்கமின்றிக்  கொன்றவனை நீங்கள் வரவேற்று விருந்தோம்பினால் உங்களைப் பிறர் இழிவாகக் கருதமாட்டார்களா? அல்லது அப்படிப்பட்ட உறவினரை நீங்கள் எள்ளி நகையாடமாட்டீர்களா? துயர உணர்வின் வெளிப்பாட்டைக கொச்சைப்படுத்தும் சத்தியமூர்த்தி போன்றவர்களின் கருத்துகளை வெளிப்படுத்தித் தரம் தாழ்த்திக்கொள்ள வேண்டா. துயர உணர்வில் கொந்தளித்துப் பீறிட்டு எழும் உணர்வாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அறிவுரை கூறுங்கள்.
ஆனால், இவ்வாறு அவர்களின் செயலுக்குக் களங்கம் கற்பிக்காதீர்கள்! எமை நத்துவாய் என எதிரிகள்  கோடி இட்டழைத்தாலும் தொடேன் என்ற பாவேந்தரின் வரிகளுக்கிணங்க நடப்பவர்களிடம் கொலைகாரனின் எச்சில் பண்டத்தை இரந்துண்டு வாழுமாறு கூறாதீர்கள்! சிங்களர்களிடமிருந்து வரும் சுற்றுலாப் பணம் தேவையில்லை. சிங்கள அரசு பிற நாடுகளின் உதவியின்றித் தனித்துவிடப்பட்டு அதற்குப்பிறகேனும் கொடுங்குற்றச் செயலை உணர வேண்டு்ம். இனப்படுகொலைகாரர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அடைந்த இன்னல்களுக்கும் இழந்த உறவுகளுக்கும் உடைமைகளுக்கும் ஈடாகவும் தமிழ் ஈழ மக்கள் விடுதலை அடைந்து தனியரசு அமைத்துக் கோலோச்ச வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

 
http://img.dinamalar.com/data/gallery/gallerye_005001737_669343.jpg

புதன், 29 ஆகஸ்ட், 2012

பெரிய கோயிலும் சாய்ந்த கோபுரமும்

பெரிய கோயிலும் சாய்ந்த கோபுரமும்

நட்பு - பதிவு செய்த நாள் : 28/08/2012

உலகின்  பணக்கார  நாடுகளெல்லாம் கட்டுமானத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. உலகிலேயே உயரமான கட்டடம் எங்களிடம்தான் உள்ளது எனச் சொல்வதற்காகவே கட்டப்படும் விண்ணை முட்டும் கட்டடங்களுக்காக அவர்கள் அள்ளி வீசும் இடாலர்கள், உயூரோ, திர்ரம், இரியால்  தொகையை அளவிட முடியாது! ஆனால் அவற்றைக் கட்டுவதற்காக இரவும் பகலும் உழைக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் பெரும்பாலும் நம்மவர்களே! நம் மூளையும், அயராத உழைப்பும், சிந்தும் வியர்வையும்தான் அவர்களை மிளிர வைக்கிறது. ஆனால் வெள்ளையன் நம் நாட்டுக்கு வருவதற்கு முன்பு  உலகத்துக்கே கட்டுமானத் தொழிலில் நம்மவர்கள்தான் முன்னோடியாக இருந்ததாக வரலாறு சொல்கிறது!
எடுத்துக்காட்டு நம் தஞ்சைப் பெரிய கோபுரம்! உலகின் ஏழு விந்தைகளில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மொத்தம் மூன்று கட்டங்களாக 177 ஆண்டுகளாகக் கட்டப்பட்டதாம். இவ்…வளவு உயரமாகக்  கட்டப்போகிறோமே, இதன் கீழே உள்ள மண்ணின் தன்மையைச் சோதிக்க வேண்டும் என்கிற அடிப்படை விவரம் கூடவா  தெரியாமல்  இருக்கும்! கட்டிய கொஞ்ச நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாய, பிறகு  இரண்டாம் தளம், மூன்றாம் தளம்  அமைத்து மொத்தமாகச் சாய்ந்து விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். உலகில் மிக மோசமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டு இந்தக் கட்டடம். ஆனால் இஃது  உலக விந்தைகளின் பட்டியலில் இன்றும் இருப்பதுதான் மாபெரும்  விந்தை!

ஆனால் நம் தஞ்சையில் உயர்ந்து நிற்கும் 216  அடி தஞ்சைப் பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டதாம்! கட்டடக்கலையில் உலகையே மிரளச் செய்யும் இந்தக் கோயில் இராசராச சோழனால் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக்  கோபுரத்தில் உள்ள  ஒரே ஒரு பாறை மட்டும் 80தன் (80 ஆயிரம்   கிலோ) எடை கொண்டதாம்! மின்தூக்கி (கிரேன்), இடிப்பான் (புல்டோசர்) போன்ற எந்தவிதத் தொழில்நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் கட்டப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தலைநிமிர்ந்து காட்சியளிக்கும் இந்தக் கோபுரம் உலக விந்தைகளின் பட்டியலில் இடம் பெறாததே ஒரு விந்தைதான்!
கட்டுமானத் தொழிலில் நாம்தான் பேராளுமைகள் எனச் சொல்வதற்கு இதை விட வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்!
நன்றி: ‘மனதில் உறுதி வேண்டும்’ வலைப்பூ.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தஞ்சைக் கோவில் : கொண்டாட்டத்திற்கு இடையில் சில கேள்விகள்

(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
<<பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விரிந்திருந்த சோழர் ஆட்சியில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அற்புதம் இந்தக் கோவில் >>அருமையான கட்டுரையில் எப்படி இந்தத் தவறு நேர்ந்தது. உடனே பத்தாம் நூற்றாண்டில் எனத் திருத்துங்கள். உங்கள் கடைசி வினாவிற்கு விடை: இப்பொழுது உள்ள பலரின் பெயர்கள் வரலாற்றில் இருந்தே துடைத்து எறியப்படும். சிலரின் பெயர்கள் எட்டப்பர்களாகவும் ஊழல் பேரரசர்களாகவும் கறை படிந்து நிலைத்து நிற்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++

முகப்புக் கட்டுரை

தஞ்சைக் கோவில் : கொண்டாட்டத்திற்கு இடையில் சில கேள்விகள்

-மணா  
natpu ''தற்காலத்தில் கட்டப்படுகிற கட்டிடங்கள் எவ்வளவு காலத்துக்குத் தாங்கும் ?'' - இன்று இந்தக்கேள்வி கேட்கப் பட்டால் இதையொட்டிப் பல துணைக்கேள்விகள் எழும்.
''கட்டியவர்கள் யார்?'''' காண்டிராக்டரா? அவர் எந்த அளவுக்குக் கட்டியிருப்பார்?'' '' குறைந்தபட்சம் இருபது ஆண்டுகளுக்காவது தாங்குமா?'' - இப்போதுள்ள உழைப்பின் மதிப்பு அவ்வளவு தான்.
ஆனால் இதே காலத்தை எதிர்கொண்டு -ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இயற்கை இடையூறுகளை எல்லாம் தாண்டி இன்றைக்கும் பிரமாண்டமாக தஞ்சை பெரிய கோவில் நிலைத்து நிற்கிறது என்றால் - அன்றைக்கு அவர்கள் கோவில் கட்டுமானத்தில் காட்டிய அர்ப்பணிப்புணர்வு மிக்க உழைப்பு கெட்டிதட்டி இப்படி வானத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கிறது.
natpuபிரகதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் தஞ்சைக்கோவில் பழந்தமிழில் பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்பட்டாலும் -மக்கள் மொழியில் அதை '' பெரியகோவில்'' என்றே அழைக்கிறார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விரிந்திருந்த சோழர் ஆட்சியில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அற்புதம் இந்தக் கோவில். கோவில் கட்டுமானத்தில் காலத்தை மிஞ்சி நிற்க என்னென்ன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியுமோ அவற்றை அன்றே பயன்படுத்தி இருக்கிறார்கள். கருங்கற்கள் அவ்வளவு நுட்பமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலைத் தாங்கிய அடித்தளம் கூட நிலநடுக்கத்தைத் தாங்கும் விதத்தில் சிறு பாறைகளைத் தாங்கியபடி கட்டப்பட்டிருக்கிறது.
வெகு தூரத்திலிருந்து கற்களை வரவழைத்து -13 அடுக்குகளைக் கொண்ட கோவில் கோபுரத்தைத்தாங்கும் சுவர் இரண்டு பகுதிகளாக இருப்பதால் கூடுதல் கனத்தைத் தாங்கக்கூடியதாக இருக்கிறது.
கி.பி 1004 ஆம் ஆண்டு துவங்கி 1010 ஆம் ஆண்டு நிறைவு பெற்றுள்ள கூம்பு வடிவில் குவிந்த கோபுரத்தை வெகு கவனமாகக் கட்டி முடித்திருக்கிறார்கள். குஞ்சரமல்லன் தலைமையிலான சிற்பிகள் குழு இந்த அற்புதத்தைச் சாதித்திருக்கிறது. அப்போது கோவில் கலசத்திற்குப் பொற்கூரை வேய்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் இறைந்து கிடக்கும் கோவிலில் வேலைபார்த்த சிற்பிகளின் பெயர்கள் எல்லாம் செதுக்கப்பட்டிருப்பது ராஜராஜ சோழனுக்கும் பெருமை. பணியாற்றிய சிற்பிகளுக்கும் பெருமை.
கோவிலுக்குள் உயர்ந்து நிற்கும் லிங்கத்தின் உயரம் 13 அடி. கோவிலுக்கு ராஜராஜன் வழங்கியிருக்கிற நகைகளை எல்லாம் பார்க்கும்போது அடுத்தடுத்த படையெடுப்புகளின் போது அவை கொள்ளை போய்விட்டாலும் கோவிலில் இருக்கும் ஒவ்வொரு பதிவும் மன்னரான ராஜராஜன் தான் கட்டிய கோவிலின் மீதிருந்த அளவு கடந்த மதிப்பை வெளிப்படுத்துகின்றன.
natpuஅவருக்கு விசாலமான மனம் இல்லாவிட்டால் இப்படியொரு சாதனை நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அன்றைக்கு இருந்த தமிழர்களிடம் இருந்த அளப்பரிய கட்டடக் கலை வெளியுலகிற்குத் தெரிய வந்திருக்கிறது. உழைப்பின் வீர்யத்தைக் காட்டும் இந்த ஈடுபாடு இன்றைக்கு ஏன் தொடரவில்லை ?
அருண்மொழித்தேவன் என்ற இயற்பெயர்கொண்ட ராஜராஜசோழன் இந்தக் கோவிலைக் கட்டி முடித்த போது - அதற்குச் சூட்டப்பட்ட பெயர் ராஜராஜேஸ்வரம். கோவிலில் உள்ள இரண்டாம் கோபுர வாசலின் பெயரே ராஜராஜன் வாசல் தான்.
எத்தனையோ தியாகங்களும்,அர்ப்பணிப்புகளும் நிறைந்து கிடக்கிற கோவிலுக்குள் இருக்கும் '' உணர்வுவயப்பட்ட தன்மை''க்கு ஓர் உதாரணம் -இந்தக் கோவிலில் இருக்கும் ஒரு கல்வெட்டு. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தரச் சோழன் உயிர்துறந்த போது அரசியான வானவன்மாதேவியும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்தத்தாகவும் ,அவருக்கு ராஜராஜனின் தமக்கையான குந்தவை கோவிலுக்குள் சிலை எழுப்பியிருப்பதாகவும் அந்தக் கல்வெட்டு சொல்கிறது.
இனி அந்த நினைவுகளை விட்டு நிகழ்கால வெக்கைக்குள் வருவோம்.
natpu காலத்தை மிஞ்சி இன்னொரு கரைக்கு வந்து சேர்ந்திருக்கிற கோவிலின் சிறப்பைத் தாமதமாக 1987 ல் உணர்ந்து உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக தஞ்சைக் கோவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே ராஜராஜனுக்கு ஒரு சிலையைச் செய்து - கோவிலுக்கு முன்னால் ஒரு ஓரத்தில் அவரை இழிவு படுத்துகிற மாதிரி ராஜராஜன் சிலையை வைத்தது ஒன்று தான் காலங்கடந்து செய்த கைங்கர்யம். அந்தச் சிலையைக் கோவிலுக்குள் வைக்கக்கூடாதா என்கிற கேள்விகள் எழுந்தபிறகு சென்ற ஏப்ரலில் கூட கோவிலுக்குள் சிலையை நிறுவ இருப்பதாக அறிவித்தவர்கள் - ஆயிரமாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் ஏன் சௌகர்யமாக மறந்து போனார்கள்?
ராஜராஜனின் பிறந்த தினமாகிய ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று இன்றும் கோவிலுக்குள் சதயவிழா கொண்டாடப்படும் போது , அவர் புகழ்பாடும் கல்வெட்டுக்கள் கோவில் முழுக்க நிறைந்திருக்கும் போது - உருவாக்கிய மன்னர் சிலையை கோவிலுக்குள் கொண்டு போவதில் என்ன பாரபட்சம் ?
இதற்குப் பின்னும் ஒரு மூடநம்பிக்கை புதைந்து கிடப்பது தான் ராஜராஜ சோழன் சிலை நகராமல் அதே இடத்தில் இருப்பதற்கும் காரணம்.
natpu ராஜராஜன் சிலையை கோவிலுக்குள் நகர்த்தினாலோ,கோவிலுக்குள் ஆட்சி செய்பவர்கள் போனாலோ - ஆட்சிக்குப் பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று நிலவுகிற மூட நம்பிக்கையை சிலர் நம்பலாம். அது வேறு. ஆனால் பகுத்தறிவுவாதிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் இந்த சந்தேகமும்,தயக்கமும் வரலாமா?
இல்லையென்றால் ,மத்தியில் தி.மு.க வும் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இருந்து கொண்டு இதைக்கூடச் செய்யவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம் ?
ஆயிரமாண்டுக்கு முந்திய ஆட்சியில் தலைநிமிர்ந்த ஒரு மன்னரை நம்முடைய மிகக் குறுகிய கால அரசியலுக்குள் புகுத்திப்பார்க்கலாமா?
natpuஇதே ராஜராஜனின் செப்புச் சிலையும்,அவருடைய மனைவி சிலையும் குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்தும் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? எப்படி இங்கிருந்து அந்தச் சிலைகள் குஜராத் மியூசியத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன என்பது குறித்த விசாரணையாவது முறையாக நடந்ததா? இந்தியாவில் இன்னொரு மாநிலத்திற்குள் இருக்கும் ஒரு தமிழ் மன்னரின் சிலையைக் கூட ஆயிரமாண்டு விழாவின் போதுகூட ஏன் கொண்டுவர முடியவில்லை?
கும்புகோணத்திற்கு அருகில் உள்ள உடையாளுருக்கு அருகில் சோழர்களின் பழைய தலைநகரம் இருந்ததாக தஞ்சையில் செய்திகள் அடிபடுகின்றன.அங்கு ராஜராஜ சோழனின் சமாதி பாழடைந்த நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தாலும் அவற்றைப்பற்றி அரசு எந்த பதிலையும் தரவில்லை. அதேசமயம் மறுக்கவும் இல்லை.
அந்த இடத்திற்கு அருகில் கிரந்த எழுத்துக்கள் அடங்கிய தூண்கள் எல்லாம் இருந்தும் அவை இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை. அதைப்போல அமெரிக்காவைச் சேர்ந்த ரொனால்ட் என்பவர் கோவிலுக்கு வழங்கிய அபூர்வமான ருத்ராட்ச மாலை காணாமல் போனது பற்றியும் இப்போது சில விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
தஞ்சையில் உள்ள தஞ்சை உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்தவர்களால் இப்போது முன் வைக்கப்படும் ஒரு கேள்வி.'' தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்டது 1010 இல். அதைக்கட்டிய ராஜராஜன் தமிழ் மன்னர். சோழர் ஆட்சி முடிவுக்கு வந்தது கி.பி.1535ல். அதன் பிறகு நாயக்க மன்னர்கள் ஆண்டு அதன்பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் மராட்டிய மன்னர்கள்.தமிழர்கள் கட்டிய கோவிலை மராட்டிய வாரிசுகள் நிர்வகிக்கலாமா? '' என்ற கேள்வியும் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் அரசு நிர்வாகத்தில் உள்ள அறநிலையத்துறையே தஞ்சைக் கோவிலின் நிர்வாகத்தையும் எடுத்துக் கொண்டால் என்ன என்கிற கேள்வியும் இதையொட்டி எழுந்திருக்கிறது.
ஒருபக்கம் - காவிரியில் கூடுதலாக நீரைவிடச் சொல்லி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கூட நிறைவேற்ற மத்தியக்கூட்டணி அரசில் இருந்தும் சரிவர முயலாத தமிழக அரசு மேலே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது?
natpu25 கோடி ரூயாயை மத்தியஅரசு செலவழிக்க -தமிழக அரசு அதைவிடக்கூடுதலான பணத்தைச் செலவழிக்கத்தயார் ஆன நிலையில் தஞ்சைக் கோவிலுக்கு ஆயிரமாண்டு விழா நடக்கலாம்.தஞ்சை மாவட்ட மக்களும் சில நாட்கள் கேளிக்கைகளை வேடிக்கை பார்க்கலாம்.
ஆயிரமாண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த ராஜராஜசோழனுக்குத் தன்னுடைய சாதனை என்று சொல்லிக்கொள்ள காலம் கடந்தும் எத்தனையோ அம்சங்கள் மிஞ்சியிருக்கின்றன.
இப்போது உள்ளவர்களுக்கு அப்படி என்ன மிஞ்சும் ?


இப்படியோர் அற்புதம் எப்படி கட்டப்பட்டிருக்கும்?


ஜராஜேச்சரத்தின் நெடிதுயர்ந்த ஸ்ரீ விமானத்தைப் பார்க்க நேரும்போதெல்லாம் இந்தக் கேள்வி எழும்: இப்படியோர் அற்புதம் எப்படி கட்டப்பட்டிருக்கும்?  இந்தக் கேள்விக்கு ஒரே மாதிரியான பதில்தான் கிடைக்கிறது: ஸ்ரீ விமானத்தைச் சுற்றி மண் சாய்வுத்தளம் அமைக்கப்பட்டு, அதன் வழியாக யானைகள் துணையுடன் கற்கள் கொண்டுசெல்லப்பட்டு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.  இது தொடர்பாக தஞ்சாவூர்ப் பகுதியில் சரளமாகப் புழங்கும் இரு கதைகள் உண்டு. ஒன்று, பெரிய கோயிலைச் சுற்றி குளங்கள் வெட்டப்பட்டு, அவற்றின் மூலம் பெறப்பட்ட மண்ணால் சாய்வுத்தளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கதைக்கு சாட்சியாக குளங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மற்றொன்று, தஞ்சாவூருக்கு வடகிழக்கேயுள்ள சாரப்பள்ளம் என்னும் ஊரிலிருந்து மண் குவிக்கப்பட்டு சாய்வுத்தளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கதைக்கு சாட்சியாக சாரப்பள்ளம் ஊர் சுட்டிக்காட்டப்படுகிறது.  ஆனால், இந்த விளக்கங்கள் போதுமானவையாக இல்லை. நாம் நம் முன்னோரின் திறனைக் குறைத்து மதிப்பிடுகிறோமோ என்று தோன்றுகிறது.  இதைக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். ராஜராஜேச்சரத்தில் ஸ்ரீ விமானத்தின் மையத்தில் இருக்கிறது சுமார் 13 அடி உயரத்திலுள்ள பெருவுடையார் திருமேனி. இதிலிருந்து ஏறத்தாழ 191 அடி உயர இடைவெளிக்கு அப்பால் உச்சத்தில் இருக்கிறது ஸ்ரீ விமானத்தின் சிகரக் கலசம். பெருவுடையார் திருமேனியின் மையமும் சிகரக் கலசத்தின் மையமும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. இந்த நேர்க்கோட்டைக் கற்பனை செய்தவாறே சுற்றியுள்ள ஸ்ரீ விமானக் கட்டுமானத்தைக் கற்பனைசெய்யுங்கள். எப்பேர்ப்பட்ட மகத்துவமான கட்டமைப்பு இது?!  நவீனங்கள் எழுச்சிபெற்ற ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். நாம் வசிக்கும் இந்தப் புவிக் கோளத்தின் எந்த ஒரு பகுதியையும் நினைத்த மாத்திரத்தில் அணுகவும் மாற்றியமைக்கவும் அழிக்கவுமான தொழில்நுட்பத்தை, சாதனங்களை, வல்லமையை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், இன்றைக்கு நாம் கொண்டிருக்கும் இந்த நவீன வசதிகள் அனைத்தையும் பயன்படுத்தி இப்படியொரு மகத்துவத்தை விஞ்சக்கூடிய ஒரு கோயிலை இதே உன்னதத்துடன் நம்மால் கட்டியெழுப்ப முடியுமா? முடியாது என்பதை ஒத்துக்கொள்வோம் என்றால், முடியும் என்று சாத்தியமாக்கிய நம் முன்னோரின் தொழில்நுட்பம் எத்தகையதானதாக இருந்திருக்கும்? அவர்கள் பயன்படுத்திய சாதனங்கள் எத்தகையவனவாக இருந்திருக்கும்? நிச்சயம் இப்படியோர் கட்டுமானத் திறன் திடீரென ஒரு காலகட்டத்தில் வெளிப்படக் கூடியதல்ல. நீண்ட கால மரபின் உச்சமாகவே இந்தப் படைப்பு முகிழ்ந்திருக்க வேண்டும். அப்படியென்றால், நம்முடைய முன்னோரின் மரபு எத்தகையதாக இருந்திருக்கும்?  நீண்ட காலமாக அழுத்திக்கொண்டிருந்த கேள்வி இது: இப்படியோர் அற்புதம் எப்படி கட்டப்பட்டிருக்கும்?  அண்மையில் ஒரு தகவல் கிடைத்தது. ராஜராஜ சோழன் ஒரு நிலப்பகுதியை கீழ்முந்திரியாகப் பிரித்திருக்கிறான் என்ற தகவல் அது. கீழ்முந்திரி என்பது கீழ்கணக்கிலுள்ள ஓர் அளவு.  ஒன்றைப் பங்கு போட கையாளப்பட்ட கணக்கே கீழ்கணக்கு. முக்கால் என்ற அளவில் தொடங்கும் அந்தக் கணக்கு அதிசாரம் என்ற அளவில் முடிகிறது. முக்கால் என்பது ஒரு ரொட்டியின் நான்கில் மூன்று பங்கை குறிக்கிறது (3/4) என்றால், அதிசாரம் என்பது ஒரு ரொட்டியின் பதினெட்டு லட்சத்து முப்பத்தியெட்டாயிரத்து நானூறில் ஒரு பங்கைக் குறிக்கிறது (1/18,38,400). இதில், கீழ்முந்திரி  என்பது ஒரு ரொட்டியின் லட்சத்து இரண்டாயிரத்து நானூறு (1/1,02,400) கூறுகளில் ஒரு பங்கைக் குறிக்கும்.  நவீனத்தின் உச்சத்தில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த நமக்கு கீழ்கணக்கு தெரியாது. நமக்கு முந்தைய தலைமுறையினர் இந்தக் கணக்கை அறிந்திருக்கலாம். எனினும், அந்தக் கணக்கிலுள்ள பல்வேறு வகைமைகளில் எந்த அளவு வரை அவர்கள் கையாண்டிருக்கக் கூடும் என்று தெரியவில்லை. ஆனால், ராஜராஜன் தலைமுறையோ மிக நுட்பமான இந்தக் கீழ்கணக்கை முழுமையாக அறிந்திருக்கிறது; மிக நுட்பமான இந்தக் கீழ்கணக்கை முழுமையாகக் கையாண்டிருக்கிறது.  இப்படியோர் அற்புதம் எப்படி கட்டப்பட்டிருக்கும்?  இந்தத் தலைமுறையின் அறிவிலிருந்து அந்தத் தலைமுறையின் அறிவை அறுதியிட முனைவது அறிவீனமாகத் தோன்றுகிறது.  இப்படியோர் அற்புதம் எப்படி கட்டப்பட்டிருக்கும்?  இந்தக் கேள்விக்கான பதில் இப்போது புலப்பட்டுவிட்டதுபோல தோன்றுகிறது.
கருத்துக்கள்

இந்த அற்புதம் நம் முன்னைத் தமிழர்கள் தமிழில் எண்ணித் தமிழில் பயின்றதால்தான் முடிந்தது. இப்பொழுது அயல் மொழிகளில் படிப்பதையும் அயல்மொழிகள் வாயிலாகப் படிப்பதையும் பெருமையாகக் கருதுவதால் அறிவியல் அறிவை இழந்தோம்.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2010 2:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 23 செப்டம்பர், 2010

பெரிய கோயிலின் மறு வடிவம்!


தஞ்சாவூர், ​​ செப்.​ 22:​ தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி அமைக்கப்பட்டு வரும் மேடை பெரிய கோயிலின் வடிவமோ என வியக்கும் வகையில்,​​ மரக்கட்டைகளைக் கொண்டு சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது.​ ​ ​ ​ கலைகளின் பெட்டகமாக விளங்கும் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சோழ மண்டலத்தின் தலைநகராம் தஞ்சையில் புதன்கிழமை தொடங்கியது.​ 5 நாள் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாது,​​ பிற மாநில மக்களும் கண்டு ரசிக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.​ ​ ​ தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 750 நாட்டுப்புறக் கலைஞர்கள்,​​ பிற மாவட்டங்களைச் சேர்ந்த 100 மரபுக் கலை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள்,​​ தமிழ்ச் சான்றோர்களின் சொற்பொழிவுகள் இடம் பெறுகின்றன.​ ​ ​ விழாவையொட்டி,​​ பெரிய கோயில்,​​ அரண்மனை வளாகம் உள்ளிட்ட விழா நடைபெறும் இடங்களில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.​​ ​ இந்நிலையில்,​​ ஆயுதப் படை மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் நிறைவு விழா மேடையோ பெரிய கோயிலை அப்படியே பெயர்த்து கொண்டு வந்து வைத்து போல,​​ 200 அடி நீளம்,​​ 100 அடி அகலத்தில் சுமார் 400 தச்சு மற்றும் சிற்பக் கலைஞர்களின் அயராத உழைப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது.​ ​ ​ மேடையின் வலதுபுறம் ராஜராஜ சோழன் யானை மீது அமர்ந்து வர,​​ அவருடன் அரசவைப் புலவர்கள்,​​ பணிப் பெண்கள் புடைசூழ விழாவுக்கு வருவது போலவும்,​​ இடதுபுறத்தில் நாட்டியக் கலைஞர்கள் விழாவில் பங்கேற்க வருவது போலவும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.​ ​ ​ கற்றளியால் எழுப்பப்பட்ட பெரிய கோயிலில் விமானத்தில் உள்ள சிற்பங்கள் போன்றே இங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன.​ இந்த விமானத்தில் வைப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட சிற்பங்கள்,​​ யாழி மற்றும் நாசிக் கூடுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.​ ​ ​ மாநாட்டுக்கு சிலை வடிப்பது மேடை அமைப்பது என்பது எளிது.​ ஆனால்,​​ கோயில் போன்ற ஒரு மேடை அமைப்பது பெரும் சவாலானது.​ அதுவும் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோயில் வடிவில் மேடை அமைப்பதென்பது எளிதான செயல் அல்லவே.​ ​ ​ ஆனாலும்,​​ ஒரு கலைஞனின் திறமை இத்தகைய நெருக்கடியான சூழலில்தான் வெளிவரும்,​​ அப்போதுதான் அவனது முழுத் திறமையை வெளிக் காட்ட முடியும்.​ அப்படியொரு வாய்ப்பு இந்த மேடையை அமைக்கும் கலைஞர்களுக்கு தற்போது வாய்த்துள்ளது.​ ​ ​ கலைகள் மீது ஆர்வம் கொண்டு கலைஞனாகத் திகழும் தமிழக முதல்வர் மேடை அமைப்பு குறித்து ஆலோசனை வழங்கி,​​ அவர் வரைந்து கொடுத்த மாதிரி வரைபடத்தை கொண்டு பெரிய கோயில் போன்ற மேடை அமைக்கப்பட்டு வருகிறது.​ ​ ​ அவரின் ஆலோசனையின் பேரிலேயே தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.​ இந்தப் பணி வியாழக்கிழமை முடிக்கப்படும் என்கிறார் மேடை அமைக்கும் பணியை தலைமையேற்று நடத்தி வரும் கலை இயக்குநர் ஜெ.பி.​ கிருஷ்ணா.​ ​ ​ பெரிய கோயில் முன்பு 420 அடி நீளத்தில்,​​ 230 அடி அகலத்தில் சுமார் 15,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.​ அரண்மனை முன்புறத் தோற்றம் போல பனை ஓலைகளில் வண்ணம் தீட்டப்பட்டு பந்தல் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.​ பந்தல் உள் பகுதி 4 ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது.​ எவ்வளவு மழை பெய்தாலும் பாதிக்காத வகையில் பந்தல் அமைப்பு உள்ளது.​ ​ ​ ​ பந்தல் மேல் பகுதியில் ராஜஸ்தான்,​​ குஜராத் மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட வண்ணத் துணிகள் கட்டப்பட்டுள்ளன.​ தரையில் வெல்வெட் துணிகள் போடப்பட்டுள்ளன.​ ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா காணும் தஞ்சை பெரிய கோயில் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகளோடு மேலும் சிறப்பு பெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
கருத்துக்கள்
திருச்சி
பெரிய கோயில் ஓவிய அறை:​ பொதுமக்கள் பார்வையிடத் திறக்கப்படுமா?


தஞ்சாவூர், ​​ செப்.​ 22:​ தஞ்சாவூர் பெரிய கோயில் கருவறைச் சுற்றிலுள்ள சாந்தாரக் கூடத்திலுள்ள சோழர் கால ஓவியங்கள் மற்றும் நாட்டிய கரணச் சிற்பங்கள் உள்ள அறைகள் பூட்டப்பட்டுள்ளன.​ அந்த அறைகள் திறக்கப்பட்டு அதிலுள்ள ஓவியங்கள்,​​ சிற்பங்களைப் பார்த்து ரசிக்க முடியுமா என பொதுமக்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.​ ​ ​ மாமன்னர் ராஜராஜ சோழன் மிகச்சிறந்த கலாரசிகன் என்பதை அவரால் உருவாக்கப்பட்ட பெரிய கோயிலால் அறிகிறோம்.​ அவரது கலை ஆர்வம்,​​ சிற்பம் மற்றும் ஓவியக் கலையிலும் இருந்துள்ளது என்பதற்குச் சான்றாக இருப்பது பெரிய கோயில் கருவறைச் சுற்றில் சாந்தாரம் என்ற அறையிலுள்ள ஓவியங்களும்,​​ நடன கரணச் சிற்பங்களுமே.​ ​ ​ கோயில் கருவறை இரண்டு சுற்றுச் சுவர்களால் ஆனது.​ இடையே சாந்தாரம் என்னும் சுற்றுக் கூடம் உள்ளது.​ இரு தளங்களிலும் இந்தக் கூடங்கள் உண்டு.​ கீழ்த் தளத்தில் உள்ள சுற்றுக் கூடத்தில் கருங்கல் சுவரின் மேல் சுண்ணாம்புக் காரை பூசப்பட்டு,​​ அதன் மேல் ஓவியங்களை ராஜராஜ சோழனின் ஓவியர்கள் வரைந்துள்ளனர்.​ ​ பின்னர்,​​ இவற்றின் மீதே விஜயராகவ நாயக்கர் காலத்தில் மீண்டும் சுண்ணாம்புக் காரை பூசப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.​ ​​ ​ இதனால்,​​ சோழர்கால ஓவியங்கள் முழுவதும் நாயக்கர் கால ஓவியங்களால் மறைக்கப்பட்டிருந்தன.​ இந்நிலையில்,​​ கடந்த 1931 ஆம் ஆண்டு நாயக்கர் கால ஓவியங்களிலிருந்து காரை பெயர்ந்ததால் அந்த இடத்தில் சோழர் கால ஓவியங்கள் இருப்பது தெரிய வந்தது.​ ​ ​ பின்னர்,​​ இந்தியத் தொல்லியல் துறையினர் வேதியியல் நிபுணர்களைக் கொண்டு நாயக்கர் கால ஓவியங்கள் பலவற்றை அகற்றி,​​ ராஜராஜ சோழன் கால ஓவியங்களை வெளி உலகுக்கு தெரியப்படுத்தினர்.​ ​ சாந்தாரம் அறையின் மேற்குப் பகுதியில் சந்தியா நிறுத்த மூர்த்திக்கு இடப்புறம் உள்சுவரில் தேவார மூவருள் ஒருவரான சுந்தரர் வரலாற்றைக் கூறும் ஓவியம் உள்ளது.​ ​ ​ தவிர,​​ உருத்திரனின் சிற்பம்,​​ அகத்தியர் ஓவியம்,​​ சுந்தரரின் திருமணத்தை சிவ பெருமான் ஆவண ஓலையைக்காட்டி தடுத்த காட்சி,​​ திருக்கயிலாய காட்சி,​​ நாட்டிய மங்கைகள் காட்சி,​​ ஆலமரத்தின் அடியில் முனிவர்கள் அமர்ந்துள்ள காட்சி,​​ மரக்கிளை மீது விலங்குகள் உள்ள ஓவியங்கள் உள்ளன.​ ​​ ​ ​ ஓவியம் மற்றும் கரணச் சிற்பங்கள் இருக்கும் அறையை யாரும் பார்க்க முடியாது.​ ​​ ​ ​ ​ பூட்டி வைக்கப்பட்டுள்ள அந்த அறை அதிகாரம் மற்றும் வசதி படைத்தவர்கள் மட்டுமே பார்த்து ரசிக்கும் வகையில்,​​ அவ்வப்போது திறக்கப்படுகிறது.​ சாமானியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.​ ​​ ​ ​ ​ ​ எவ்வித அறிவியல் வளர்ச்சியும் இல்லாத காலத்தில் இவ்வளவு சிறப்பாக அழிக்க முடியாத வண்ண மைகளைக் கொண்டு தீட்டியிருக்கக் கூடிய ஓவியங்கள் உலகமே வியந்து பார்க்கக் கூடியவை.​ இந்த ஓவியங்கள் மற்றும் கரணச் சிற்பம் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோயிலுக்குள் இருப்பதை பொதுமக்கள் பார்த்து மகிழ வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில்,​​ அது மக்கள் பெற்ற பயனாகவே கருதப்படும்.​ ​ ​ கட்டடக் கலை,​​ சிற்பக் கலை,​​ கல்லெழுத்துக் கலை ​(கல்வெட்டு),​​ இலக்கியங்கள் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு திட்டமிடப்பட்டிருக்கும் என யோசித்துப் பார்த்தால்,​​ இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மெய்சிலிர்க்க வைக்கிறது.​ கட்டடம் மற்றும் சிற்பக் கலையை வெளியிலிருந்து பார்த்து மகிழும் போது கருவறைச் சுற்றில் உள்ள ஓவியத்தை பார்த்து ரசிக்க முடிவில்லை.​ ​ அஜந்தா,​​ எல்லோரா,​​ சித்தன்னவாசல் ஆகிய இடங்களிலெல்லாம் ஓவியங்களைப் பார்க்க முடிகிறது.​ ஆனால்,​​ பெரிய கோயிலுக்குள் உள்ள ஓவியங்களைப் பார்க்க முடியவில்லை.​ கலை ஆர்வம் உள்ளவர்களால் கூட அங்கு போக முடியாத சூழல் உள்ளது.​ ​​ ​ ஓவியம் பாதிக்கப்படாத வகையில் நவீன முறையைக் கையாண்டு மாமன்னரின் பெருமைகளை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையிலான,​​ வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.​ ​ பெரிய கோயில் கருவறையிலுள்ள சோழர்கால ஓவியங்களை தமிழ்ப் பல்கலைக்கழகம் நூலாகத் தொகுத்துள்ளது.​ ​ பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி,​​ செப்.​ 24 -​ ஆம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் "இந்தியப் பெருமையின் தஞ்சையின் பங்கு' என்ற தலைப்பில் நடைபெறவுள்ள ஆய்வரங்கைத் தொடக்கிவைத்து,​​ இந்நூலையும் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

ulagathil ulla ella tamilrum parka vendiyathu pls arrange
By srikrishna
9/23/2010 3:33:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தொடக்கமே எம்.ஜி.ஆர்.​ பாடல்


தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா கலைநிகழ்ச்சிகளை அமைச்சர்கள் முரசு கொட்டி தொடங்கிவைத்தனர்.​ தொடர்ந்து முதலாவதாக,​​ எம்.ஜி.ஆர்.​ நடித்த ஆனந்தஜோதி படத்திலிருந்து ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்ற பாடல் இசைக்கப்பட்டது.​ அதைத் தொடர்ந்தும்,​​ எம்.ஜி.ஆர்.​ நடித்த இதயக்கனி படத்திலிருந்து "நீங்க நல்லா இருக்கோணும்' என்ற பாடல் இசைக்கப்பட,​​ அதற்கு கலைமாமணி நாடிராவ் குழுவினரின் பொய்க் கால் குதிரையாட்டம் நடைபெற்றது.​ பின்னர்,​​ நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ராஜராஜ சோழனின பெருமையை பறைசாற்றும் பாடல்களுக்கு நடனம் நடைபெற்றது.பெரிய கோயில் வளாகத்தில்...பெரிய கோயில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.​ இதுகுறித்து எந்த விமர்சனமும் இல்லை.​ ஆனால்,​​ பெரிய கோயிலை பிரதானப்படுத்தி நடைபெறும் விழாவின் தொடக்கம் கரந்தை தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது ஏன்?​ அதேநேரத்தில்,​​ பெரிய கோயில் வளாகத்திலும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற போதிலும்,​​ அங்கு தொடக்க விழாவை நடத்தாததும்,​​ அதில் அமைச்சர்கள்,​​ அதிகாரிகள் பங்கேற்காததும் ஏன் என்று தெரியவில்லை.அகழியில் தண்ணீர்...பெரிய கோயிலைச் சுற்றியுள்ள அகழியை நகராட்சி வசமிருந்து மீட்டு படகு சவாரி அமைத்து அழகுபடுத்த தொல்லியல் துறை நீண்ட காலமாகப் போராடி வந்தது.​ இந்நிலையில்,​​ புதன்கிழமை தொடங்கிய பெரிய கோயில் விழாவையொட்டி,​​ கல்லணைக் கால்வாய் புது ஆற்றில் இருந்து அகழியில் நான்கு ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.​ அகழியில் குப்பைகளும்,​​ முள்செடிகளும் மண்டிக் கிடந்தன.​ அதைச் சுத்தப்படுத்தாமல் தண்ணீர் நிரப்புவதும் ஏனென்று தெரியவில்லை.​ இதனால் அகழி நீர் கலங்கலாக குப்பைகளுடன் உள்ளது.
கருத்துக்கள்

ஏனென்று தெரிந்து கொண்டே தினமணி கேள்வி கேட்பது சரிதானா?ஏன் என்று சொல்ல அச்சம். அதே நேரம் மக்களிடம் அதைச் சுட்டடிக் காட்ட வேண்டும் என்ற ஆதங்கம. அதனால்தான் இந்தச் செய்தியோ! மூட நம்பிக்கையாளர்களும் சில வற்றில் பகுத்தறிவுடன் நடந்து கொள்வார்கள். பகுத்தறிவாளர்களும் சிலவற்றில் மூட நம்பிக்கையுடன் நட்நது கொள்வார்கள். இதுதான் பொது வழக்கம். போதுமா? நாங்கள் செய்தியைப் புரிந்து கொண்டோம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2010 6:24:00 PM
what Mr.Usman wrote here all true. Let the Sun Group show gratitude to MGR in some way
By sadak
9/23/2010 2:49:00 PM
MGR WAS INSTRUMENTAL FOR KARUNANIDHI'S UPLIFTMENT AND BECAUSE OF HIM ONLY HE BECAME CHIEF MINISTER. EVEN 1967 DMK WON THE ELECTION JUST BECAUSE OF MGR AND HIS POSTERS WITH GUN SHOT WOUND PASTED ALL OVER TN AND PUBLIC VOTED IN FAVOUR OF MGR EVENTUALLY DMK WON THE ELECTION. LATE CM ANNA KNEW THIS FACT AND THE PRESENT RULERS MIGHT HIDE THE FACT. MGR HELPED MANY WITH CASH AND EXTENDED MORAL SUPPORT INCLUDING THE LATE MURASOLI MARAN, SEE THE SUN GROUP NOW BECAME THE NO.1 RICH IN ASIA. WILL THEY SHOW SOME SORT OF GRATITUDE TOWARDS MGR. IF THEY SHOW WELL AND GOOD. IF NOT, TIME WILL TEACH THEM A FITTING LESSON.
By Usman
9/23/2010 2:23:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்