புதன், 20 மார்ச், 2013

உலகத் தமிழ் அமைப்பு அமெரிக்காவில் போராட்டம்

தமிழக மாணவர்களை ஆதரித்து உலகத் தமிழ் அமைப்பு சார்பில் அமெரிக்காவில் போராட்டம்

தமிழக மாணவர்களை ஆதரித்து மார்ச் 19 நேற்று காலை 9 மணியளவில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் முன் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
அதிக அளவிலான தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு முழக்கம் செய்தனர். ஏராளமான தமிழர்கள், வேலைநாளான நேற்று வந்து, இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போராட்டத்தின் போது முழங்கப்பட்ட கோஷங்கள்:
தமிழ் நாட்டு மாணவர் போராட்டத்தை ஆதரிக்கிறோம்,
இந்தியாவே !  மனித உரிமையை ஆதரி, தமிழர்களைக் காப்பாற்று
இந்தியாவே !  அமெரிக்கத் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யாதே
அதாவது,
“We support TN Students”,
“INDIA – Support Human Rights,
INDIA – Save the Tamils,
INDIA – Don’t Dilute US Resolutions”
என உரத்த குரலில் முழக்கமிட்டனர்.
இறுதியாக துணைத் தூதர் ஒருவரைச் சந்தித்து உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் (www.worldthamil.org) கடிதம் ஒன்றை அளித்தார்கள். அவரும் அக்கடிதத்தை இந்தியாவிற்கும் மற்ற தூதரகங்களுக்கும் அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். மேலும் அதே கடித்தத்தை நியூ யார்க் நகரில் உள்ள தூதரகத்திற்கும் தொலைப்படி(ஃபேக்ஸ்) மூலம் அனுப்பி வைத்தனர்.
அமெரிக்க காவல்துறை இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பும், பாதுகாப்பும் தந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக