மு.க. தாலின் வீட்டில் மை.பு.பி. /சிபிஐ ஆய்வு திமுகவுக்கு மத்திய அரசு தரும் நெருக்கடி?
மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சிபிஐ அதிகாரிகளின் சோதனைக்கான காரணம் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை
மேலும் ஸ்டலினின் நண்பரான ராஜாசங்கர் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது
இன்று காலை 7.15 மணி முதல் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்டாலினின் வீட்டுக்கு இன்று காலை அதிகாரிகள் 7 பேர் குழு வந்ததாகத் தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக் கார்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் ஒன்று ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வெளிநாட்டு கார் இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசில் இருந்தும் கூட்டணியில் இருந்தும் திமுக விலகிய நிலையில், அடுத்த 2 நாட்களுக்குள் சிபிஐ சோதனை மூலம் அக்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவே இந்த சோதனை பார்க்கப்படுகிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக