வியாழன், 21 மார்ச், 2013

இனத்துயரத்தைக் கட்சிச் சிக்கலாகக் கருதும் மத்தியக் கட்சிகள்









அனைத்து க் கட்சி க் கூட்டத்தில் மாறுபாடான கருத்து
 
புதுதில்லி: இலங்கைக்கு எதிராக க் , பாாளில்  தீர்மானம் தாக்கல் செய்வது குறித்தும், அமெரிக்காவின் தீர்மானத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்காகவும், நேற்று இரவு, டில்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில், ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், கமல்நாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெரும்பாலான கட்சிகள், இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தன. இப்பிரச்னை, மத்திய அரசுக்கும், தி.மு.க.,விற்கும் உள்ள பிரச்னை என, பெரும்பாலான எதிர்கட்சிகள் தெரிவித்தன. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இருகட்சிகள் மட்டுமே தீர்மானம் கொண்டுவர ஆதரவு தெரிவித்தன.

ரேவதி ராமன் சிங் (சமாஜ்வாதி) இலங்கை நமக்கு நட்புநாடு, இதற்கு எதிரான தீர்மானத்தை பார்லிமென்டில் நிறைவேற்றக்கூடாது. 1962ல், சீனா நம்மீது போர் தொடுத்தபோது, நமக்கு இலங்கை உதவியாக இருந்துள்ளது. அப்சல் குரு தொடர்பாக, பாகிஸ்தான் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாம் நிராகரித்துள்ள நிலையில், நட்புநாடான இலங்கைக்கு எதிராக ஏன் தீர்மானம் கொண்டு வரவேண்டும்? தேசிய நலன் கருதியும், இலங்கையில், தமிழர் நலன் கருதியும்தான் இந்தியாவின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். சரத்யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்) இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்விற்காக, இந்தியா சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இலங்கைக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) : இந்த பிரச்னை, மத்திய அரசுக்கும், தி.மு.க.,விற்கும் உள்ள பிரச்னை, இதனை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.,): தி.மு.க., மற்றும் மத்திய அரசு ஆகியவற்றுக்கிடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்னை தொடர்பாக, அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும்.
மன்மோகன் ஆலோசனை
முன்னதாக, அமெரிக்காவின் தீர்மானத்தில், இந்தியா என்ன நிலையை மேற்கொள்ள வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோனை கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், சிதம்பரம், சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன், வெளியுறவு அமைச்சக செயலர், ரஞ்சன் தேசாய், ஐ.நா.,வுக்கான, இந்திய பிரதிநிதி, திலீப் சின்கா உள்ளிட்டோர், பங்கேற்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக