தாலின் வீட்டுப்புலனாய்வு என்பது அரசியல் காரணம்தான் என்பதில் ஐயமில்லை. எனினும் மற்றொரு துறை அமைச்சரைக் கண்டிக்கும் அதிகாரம் சிதம்பரத்திற்கு உள்ளதா? இவர் என்ன தலைமையமைச்சரா? தேர்தலுக்குப் பின் தன் அணிக்கான ஆதரவு கருதி இவர் நடந்திருக்கலாம். அதிகாரத்தை த் தவறாகப் பயன்படுத்தும் இவர்மீது தலைமையமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
+++++++++++++++++++++++++++++++++++++++++++
மு.க. தாலின் வீட்டில் சோதனை: சி.பி.ஐ. நடவடிக்கையை ஏற்க முடியாது- ப.சிதம்பரம்
பதிவு செய்த நாள் :
வியாழக்கிழமை,
மார்ச் 21,
1:22 PM IST
Vinyasa Yoga
புது தில்லி, மார்ச்சு 21-
தி.மு.க.
பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
நடத்தினார்கள். சொகுசு கார் இறக்குமதியில் நடந்த முறைகேடு தொடர்பாக இந்த
சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மத்திய
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. விலகிய உடன் சி.பி.ஐ.
சோதனை நடத்தியதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மு.க.ஸ்டாலின்
வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்
கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மு.க.ஸ்டாலின்
வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்க கூடாது. சம்பந்தப்பட்ட துறை
மந்திரியிடம் எனது கண்டனத்தை தெரிவித்து உள்ளேன். இதுகுறித்து மேலும்
கேள்வி கேட்க விருப்பினால் சம்மந்தப்பட்ட மந்திரி அல்லது சி.பி.ஐ.
இயக்குனரிடம் கேளுங்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
இதேபோல்
மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு பா.ஜனதா மற்றும்
இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாரதீய ஜனதா
உறுப்பினர் பிரகாஷ் ஜவாட்கர் இதுகுறித்து கூறியதாவது:-
இந்த
சோதனை மூலம் காங்கிரஸ் அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்தி வருவது
நிரூபணமாகி உள்ளது. இது அரசியல் நோக்கமாகும். சி.பி.ஐ.யுடன் காங்கிரஸ்
கூட்டணி வைத்து உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க இந்த அரசு எது
வேண்டுமானாலும் செய்ய விரும்பும் என்பதை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறும்போது:-
காங்கிரஸ் அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்தி உள்ளது. சி.பி.ஐ. காங்கிரஸ் புலனாய்வு குழுவாக செயல்படுகிறது என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.ராஜா கூறும்போது,
அரசியல்
காரணங்களுக்காக சி.பி.ஐ. பயன்படுத் தப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு
கூட்டணியில் தி.மு.க. இருந்தபோது சோதனை நடத்தப்படவில்லை. இதற்கு பிரதமர்
மன்மோகன்சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
சமாஜ்வாடி
கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் கூறும்போது, இந்த நடவடிக்கையை சமாஜ்வாடி
கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. இது பழி வாங்கும் அரசியல். மத்திய அரசு தனது
அதிகார பலம் மூலம் அச்சுறுத்தக்கூடாது என்றார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தாலின் வீட்டுப்புலனாய்வு என்பது
அரசியல் காரணம்தான் என்பதில் ஐயமில்லை. எனினும் மற்றொரு துறை
அமைச்சரைக்கண்டிக்கும் அதிகாரம் சிதம்பரத்திற்கு உள்ளதா? இவர் என்ன
தலைமையமைச்சரா? தேர்தலுக்குப் பின் தன் அணிக்கான ஆதரவு கருதி இவர்
நடந்திருக்கலாம். அதிகாரத்தை த் தவறாகப் பயன்படுத்தும் இவர்மீது
தலைமையமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார்
திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக்
காப்போம்! இனத்தைக் காப்போம்!/
|
வந்தவர்கள் சிபிஐ அஹ
இருக்கமுடியாது. தி மு க இதை ஒரு நாடகமாக இவர்களே ஆட்களை வைத்து
நடித்திருக்க வாய்ப்பு அதிகம்
|
தனியா நின்னு டெப்பாசிட் கூட வாங்கமுடியத னேல்லாம் கூட மத்திய மந்திரியாகலாம்
|
வாயத் திறந்தாலே பொய்
வக்கீலில்லியா? இவருக்குத் தெரியாம இவர் டிப்பர்த்மென்ட் ரெய்டு பணிச்சம்
அப்போ ராஜினாமா பண்ணுவதுதானே? எண்டா திமுகவோட சேர்ந்து நாடகம் ஆடுறீங்க ?
நாங்க ஏமாறமாட்டோம்
|
அப்படி பார்த்தால் ஒரு திருடனை
பிடிக்கும் முன்பு போலீஸ்காரர் உள்துறை மந்திரியிடம் அனுமதி வாங்க வேண்டுமா
அல்லது அந்த உள்துறை மந்திரி அந்த திருடனை பிடிக்க வேண்டாம் என்று உத்தரவு
போடா முடியுமா..............யாரவது
விளக்குங்களேன்......................ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக
தெரிகிறது. கூட்டு களவாணிகள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுக்க மாட்டார்கள்.
ஏன் என்றால் அது இருவருக்கும் பெரிய ஆபத்தில் முடியும். இது தான்
உண்மை........
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக