வெள்ளி, 22 மார்ச், 2013

சென்னை - மு.க.அழகிரி வீட்டில் புலனாய்வு


சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.அழகிரி பண்ணை வீட்டில்  புலனாய்வு  (சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை)
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.அழகிரி பண்ணை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
Tip to preserve Lettuce fresh
சென்னை, மார்ச்.22-

சென்னையில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் மு.க.ஸ்டாலின் வீடு உள்பட 19 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த சொகுசு கார்கள் இறக்கமதி செய்ததில் ரூ.50 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுதொடர்பாக கார் டீலர் அலெக்ஸ், வருவாய் புலனாய்வு அதிகாரி முருகானந்தம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது.

அந்த கார்களை வாங்கியவர்கள் வீடுகளில்தான் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.1 கோடி மதிப்புள்ள இந்த வகை சொகுசு காரில் ஒரு காரை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருந்தார். இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிவித்தனர்.

இதேபோல் ஒரு விலை உயர்ந்த கார் மு.க.அழகிரி வீட்டிலும் இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனவே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது அங்கு கார்கள் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய மறுநாளே சி.பி.ஐ. சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங், மத்திய மந்திரி ப.சிதம்பரம் உள்பட அனைவரும் இந்த சோதனை பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

மு.க.அழகிரியும், நெப்போலியனும் டெல்லியில் மத்திய மந்திரி ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்கள். சுமார் ஒரு மணி நேரம் ரகசியமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது தொடர்பாக தனது கவலையை மு.க.அழகிரி பகிர்ந்து கொண்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக