வெள்ளி, 22 மார்ச், 2013

செனீவா தீர்மானம் - இலங்கைக்குத் தோல்வி: உருத்திரகுமாரன்

செனீவா தீர்மானம்- தமிழர்களுக்கு வெற்றி இல்லை; ஆனால் இலங்கைக்கு த் தோல்வி: உருத்திரகுமாரன்

ஜெனீவா ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம், தமிழர்களுக்கு வெற்றி இல்லை; ஆனால், அது இலங்கைக்கு தோல்வியே என்று கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன்.
"தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றி, இந்திய அரசை தம் வசப்படுத்துவதில் தமிழகம் அடையும் வெற்றியில்தான் பெரிதும் சார்ந்துள்ளது."
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை எதிர்பார்ப்புகளை நெருங்கி வரவில்லை. இதனால் இத் தீர்மானத்தை நாம் தழிழர்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. ஆனால் நிச்சயமாக இதனை இலங்கைக்கான தோல்வியாக நாம் பார்க்க முடியும் என்றார் ருத்திரகுமாரன்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 13 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேறியுள்ளது. 47 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 26 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 13 நாடுகள் எதிராகவும் வாக்களிக்க 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையும் வகித்திருந்தன.
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை எதிர்பார்ப்புக்களை நெருங்கி வரவில்லை. இதனால் இத் தீர்மானத்தை நாம்தழிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதமுடியாது. ஆனால் நிச்சயமாக இதனை இலங்கைவுக்கான தோல்வியாக நாம் பார்க்க முடியும்.
அனைத்துலக அழுத்தங்கள் எதுவுமின்றி, தான் விரும்பியவாறு அதிகாரத்தை தமிழர் தேசத்தின் மீதும் இலங்கைத் தீவின் ஏனைய மக்கள் மீதும் செலுத்த விரும்பும் மகிந்த ராஜபட்சவின் குடும்ப ஆட்சிக்கு இத் தீர்மானம் ஒரு தொல்லையாகவே இருக்கும். மேலும் இத்தகைய தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விவாதிக்கப்படுவதும் நிறைவேற்றப்படுவதும் சிங்களம் மறைக்கவும் மறக்கவும் விரும்பும் இறுதி போர்க்கால நிகழ்வுகளை அனைத்துலக அரங்கில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு வழிகோலச் செய்கிறது.
கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இலங்கைக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் உறுதியான ஆதரவு நாடான ஜப்பான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலைமை வகித்திருப்பதை இங்கே குறிப்பிடலாம்.
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளை இலங்கையின் ஆதரவு நாடுகள் என்பதனை விட ஏதோ ஒரு வகையில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகைளுடன் முரண்பட்ட நாடுகள் எனக் குறிப்பிடுவதும் கூடுதல் பொருத்தமாக இருக்கும். இந்த உலகம் அமெரிக்கா தலைமையிலான ஒற்றை உலக ஒழுங்கில் (unipolar world order) இருந்து விலகி பல முனை உலக ஒழுங்கினுள் (Mulit-polar world order) நுழையும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதனையும் எடுத்துக்காட்டுகிறது.
இருந்தபோதும் இலங்கை அனைத்துலக அரங்கில் கூடுதலான தனிமைப்பட்டு வருகிறது என்பதனை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை வாக்கெடுப்பு சுட்டிக் காட்டுகிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானங்களில் இரண்டு விடயங்கள் உள்ளடக்கப்படுவது மிகவும் முக்கியமானது.
1) முதலாவது, ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசு இனஅழிப்பு (Genocide) புரிகிறது என்பது தீர்மானத்தில் உள்ளடக்கப்படல்.
2) இரண்டாவது, இன அழிப்பில் ஈடுபட்டவர்கள் மீது அனைத்துலக விசாரணை, நீதியான பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டுவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளடக்கப்படல்.
இந்த இரண்டையும் அமெரிக்கத் தீர்மானம் உள்ளடக்கவில்லை. இதனால் இத் தீர்மானத்தை தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் தீர்மானமாக, திருப்பதிப்படுத்தும் தீர்மானமாக நாம் கருதமுடியாது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் அரசுகள் இயங்கும் நடைமுறையினைப் அறிந்தவர்கள் என்ற வகையிலும் நலன்களின் அடிப்படையில் அமையும் அரசுகளின் லாப நட்டக் கணக்களின் சூத்திரங்களைப் புரிந்தவர்கள் என்ற வகையிலும் இந்தத் தீர்மானம் எமக்கு ஆச்சரியமான ஒன்றாக அமையவில்லை.
இருப்பினும் நீதி கோரும் தமிழ் மக்களின் நீதிக்கான குரல் இத் தீர்மானத்தில் உரிய முறையில் மதிக்கப்படவில்லை என்பது குறித்து நமது அதிருப்தியினை பதிவு செய்ய விரும்புகிறோம்.
குறைந்தபட்சம் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதுகூட தீர்மானத்தில் உரியவகையில் உள்ளடக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாகும்.
மத அடிப்படையிலும் அரசியல் கருத்து அடிப்படையிலும் இலங்கைத் தீவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று குறிப்பிடும் இத் தீர்மானம் இலங்கைத் தீவில் பாரிய முறையில் மனித உரிமை மீறல்கள் தமிழினம் அடிப்படையிலேயே மீறப்படுகின்றன என்ற உண்மையை சுட்டிக் காட்டாமையை நாம் கண்டிக்கின்றோம்.
இத் தருணத்தில், நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய சிலவற்றை மக்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் முக்கியம் எனக் கருதுகிறேன்.
நாம் உலக அரசுகளுடன் நமக்கு நியாயம் கிடைப்பதற்காக அரசியல் ராஜதந்திர வழிகளில் தொடர்சியாகப் போராட வேண்டியவர்களாக உள்ளோம். இலங்கைத் தீவில் சிங்கள அரசாங்கம் தமிழீழ மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூர வன்முறை இனஅழிப்பின் (genocide) பாற்பட்டது என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமான ஒன்றல்ல.
இருப்பினும் இதனை இன அழிப்பாக வெளிப்படுத்தாது வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தது இரு தரப்பிரானாலும் புரியப்பட்ட போர் குற்றம் என்ற நிலைப்பாட்டையே அனைத்துலக அரசுகள் கொண்டிருக்கின்றன.
இன அழிப்பை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பாதுகாப்பான தீர்வாக பாதுகாப்பு, (self defense), தன்னினம் பேணுதல் (self preservation) ஆகிய சர்வதேச சட்ட தார்மீகக் கோட்பாடுகளின் அடிப்படையில் பரிகார நீதியாக remedial justice ) தமிழீழத் தனி அரசு அமைக்கும் நிலையை ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக