ஞாயிறு, 17 மார்ச், 2013

திருத்தம் கொண்டுவராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: கருணாநிதி எச்சரிக்கை

புலி வருது புலி வருது என்று அடிக்கடி சொல்பவன் பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள் என்பதுபோல் ஆகிவிட்டது. 99 விழுக்காடு  இந்தியா ஏதும் சப்பைத் தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்து அதனால் இவ்வாறு உறுதியாக முதுபெரும் தலைவர் அறிவிக்கிறார்என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. இதன் காரணம் அவரது இனப்படுகொலைக்கால நடவடிக்கைகளே! நாட்டு மக்களையும் இன மக்களையும் மறந்து வீட்டு மக்களை எண்ணியதால் அவரது தலை சாயலாயிற்று. எனவே, நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தபின்பே எதையும் சொல்வது பொருத்தமாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++

திருத்தம் கொண்டுவராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: கருணாநிதி எச்சரிக்கை


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்றால் மத்திய அமைச்சரவையில் இருந்து மட்டுமல்ல, கூட்டணியில் இருந்தே வெளியேற வேண்டி வரும் என்று கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நேற்று இரவு பிரதமருக்கும், கூட்டணித் தலைவர் சோனியாவுக்கும் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறினார். இன்று  செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, இந்த விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம்; நீடிக்காது என்பது உறுதி என்றார்.
மேலும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் கூட்டணியில் இருந்து நிச்சயம் வெளியேறுவோம் என்று உறுதிபடத்  தெரிவித்தார்.
இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்ற திருத்தத்தை   தீர்மானத்தில் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திய கருணாநிதி, இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், அதுவும் குறுகிய கால வரம்புக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படாவிட்டால் அது, இலங்கைத் தமிழருக்கு அநீதி இழைத்ததாகவே அமையும் என்றும் கூறினார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தீர்மானத்தில் இந்தியா திருத்தம் செய்யாவிட்டால் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. நீடிக்காது:
கருணாநிதி பரபரப்பு பேட்டி
சென்னை, மார்ச். 17-

இலங்கை பிரச்சினை மாணவர்கள் போராட்டத்தால் விசுவரூபம் எடுத்துள்ளது. தமிழ் இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கா விட்டால் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருப்பதே அர்த்தமற்ற தாகி விடும் என்று கருணாநிதி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசில் இருந்து தி.மு.க. எந்த நேரத்திலும் விலகலாம் என்ற பேச்சு அடிப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்கா சில திருத்தங்களுடன் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், நாராயணசாமி ஆகியோரும் இதை சூசகமாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பாக கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு 3 பக்க அவசர கடிதம் ஒன்றை அனுப்பினார். இதுபற்றி கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நேற்று இரவு பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி இருவருக்கும் தனித் தனியாக ஒரு அவசர கடிதம் அனுப்பி இருக்கிறேன். இதைத் தமிழிலே கூறவேண்டுமென்றால், ‘‘இலங்கை அரசாலும், அரசு நிர்வாகத்தில் உள்ளோராலும் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும். நம்பக்த் தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருத்தங்கள் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: ஆரம்பத்தில் இருந்தே இந்த விசயத்தில் நீங்கள் பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியும் மத்திய அரசு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லையே?

பதில்: மத்திய அரசு சீரியசாக நான் குறிப்பிட்டு இருக்கும் இந்த திருத்தங்களோடு தீர்மானத்தை வலியுறுத்த வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவின் அடிப்படையில் விவாதித்து நாங்களும் விவாதித்து முடிவு செய்வோம்.

கே: பிறமாநில பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லையே?

ப: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க யாரும் முன்வரவில்லை என்ற கனத்த இதயத்தோடு இந்த முடிவுக்கு வர உள்ளோம்.

கே: நீங்கள் கோரும் மாற்றம் செய்யப்படவில்லை என்றால், மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில்லை என்று ஏற்கனவே நீங்கள் எடுத்த முடிவு உடனடியாக எடுக்கப்படுமா?

ப: எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம். நீடிக்காது என்பது உறுதி.

கே: இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு எதுவும் செய்யவில்லையே?

ப: அதுதான் தமிழனின் தலை எழுத்து.

கே: தற்போதைய சூழ் நிலையில் மத்தியில் இருந்து யாராவது உங்களை தொடர்பு கொண்டார்களா?

ப: யாரும் என்னோடு பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, March 17,2013 03:26 PM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
புலி வருது புலி வருது என்று அடிக்கடி சொல்பவன் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள் என்பதுபோல் ஆகிவிட்டது. 99 விழுக்காடு இந்தியா ஏதும் சப்பைத் தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்து அதனால் இவ்வாறு உறுதியாக முதுபெரும் தலைவர் அறிவிக்கிறார்என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது. இதன் காரணம் அவரது இனப்படுகொலைக்கால நடவடிக்கைகளே! நாட்டு மக்களையும் இன மக்களையும் மறந்து வீட்டு மக்களை எண்ணியதால் அவரது தலை சாயலாயிற்று. எனவே, நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தபின்பே எதையும் சொல்வது பொருத்தமாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக