ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக
விலகும் விஷயத்தில் "கட்சித் தலைவரின் முடிவுதான் எனது நிலைப்பாடு' என்று
மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் போக்குக்கு அதிருப்தி
தெரிவித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும், அமைச்சரவையில்
இருந்தும் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் செவ்வாய்க்கிழமை
அறிவித்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக-வைச் சேர்ந்த மத்திய
அமைச்சர் மு.க. அழகிரியின் கருத்தை அறிய வடமாநிலங்களைச் சேர்ந்த சில
தொலைக்காட்சி நிருபர்கள் சென்றனர்.
அப்போது வளாகத்தில் உள்ள தனது அமைச்சக காரில் ஏறிய அழகிரியிடம்,
""மத்திய அமைச்சரவையில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்
இருந்தும் விலகுவதாக திமுக அறிவித்துள்ளதே. அதுபற்றி உங்கள் நிலை என்ன?''
என்று கேட்டனர்.
அதற்கு அழகிரி, ""இப்போதுதான் நானும் அது பற்றி கேள்விப்பட்டேன்'' என்று பதில் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, ""ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அளித்துவரும் ஆதரவை
திமுக விலக்கிக் கொள்ள இதுதான் சரியான தருணம் என கருதுகிறீர்களா..?''
என்று நிருபர் ஒருவர் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில்
அளித்த அழகிரி, ""நான் தமிழில்தான் உங்களுக்குக் கூற முடியும். எங்கள்
லீடர் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் நான் செயல்படுவேன்'' என்றார்.
மற்றொரு நிருபர், ""ஆங்கிலத்தில் பதில் தர முடியுமா?'' என்று கேட்க
""நோ, ஐ கான்ட் ஸ்பீக் இன் இங்கிலீஷ். ஐ ஹேவ் லாங்குவேஜ் பிராப்ளம்''
(என்னால் ஆங்கிலத்தில் பேச முடியாது. எனக்கு மொழிப் பிரச்னை உள்ளது) என்று
ஆங்கிலத்தில்
அழகிரி கூறினார். அதைத் தொடர்ந்து, நிருபர்கள் மறு கேள்வி எழுப்பும்
முன்பு தனது ஓட்டுநரிடம் காரை வேகமாக இயக்கும்படி அழகிரி கூறினார்.
அதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தை விட்டு அழகிரியின் கார் வேகமாக சென்றது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருத்துகள்(1)
நான் அழகிரியின் பதிலை டிவியில் பார்த்தேன். ரொம்ப கேவலமாக
இருந்துது. ஒரு மத்திய மந்திரிக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தி தெரியாமல்
எப்படி தன பணிகளை செய்ய முடியும்? திமுகவின் கட்சி நலனுக்காக, கொள்ளை
அடிக்க ஒரு மத்திய மந்திரி.. !!
பதிவுசெய்தவர்
நரேஷ் குமார் (பெங்களூர்)
03/20/2013 07:16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக