சனி, 11 டிசம்பர், 2010

world without atombombs

வேடிக்கையாக உள்ளது. அண்டை நாட்டு உரிமைப்போரில்தலையிட்டு வேதியல் குண்டுகளையும் கொத்துக் குண்டுகளையும் போட்டு இன அழிப்பில் ஈடுபடுவார்களாம்! அணு ஆயுதங்களை வழங்கி இயக்குவதற்குப் படை வீரர்களையும் அனுப்பிப் பெருமை கொள்வார்களாம்! அணு ஆயுதம் இல்லாத உலகத்திற்குச் செயல் திட்டம்   போடுவார்களாம்! சரி! சரி! ஆள்வோர் கேழ்வரகில்  நெய் வடிகிறது என்று சொன்னால் நாம் கேட்டுத்தானே ஆக வேண்டும்!  ஆட்சி மாறும் வரையாவது கேட்டுத் தொலைவோம்! இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்


அணுஆயுதம் இல்லாத உலகம்: மணி சங்கர் தலைமையில் குழு


புது தில்லி, டிச.10: அணு ஆயுதக் கருவிகள் இல்லாத உலகம் செயல் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் தலைமையில் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.1988-ல் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது இந்த செயல் திட்டத்துக்கு வடிவம் கொடுக்கப்பட்டது.இந்த செயல் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பரிந்துரைகள் அளிக்குமாறு புதிய குழுவை பிரதமர் அமைத்துள்ளார். மணி சங்கர் ஐயர், பேராசிரியர்கள் அமிதாப் மட்டூ, ஏ. குப்தா உள்ளிட்ட 9 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்கவேண்டும் என்பேத இந்த செயல் திட்டத்தின் நோக்கமாகும்.இதுகுறித்து மணி சங்கர் ஐயர் கூறியதாவது: பரிந்துரையை சமர்ப்பிக்க காலக்கெடு விதிக்கப்படவில்லை. இருந்தபோது விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்க முயற்சி செய்வோம் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக