வெட்கக் கேடான மக்கள் வாழும் நாடு! மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் கற்பழிப்பு, கொளளை, கொலை புரிவார்களாம்.
பாதிக்கப்பட்டவர்கள் உண்மையைச் சொன்னால் அது தவறாம். அநீதி இழைப்பவர்களின் உரிமைகளைப் பாதிப்பதாம். என்ன கொடுமையடா இது!!!
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பாதிக்கப்பட்டவர்கள் உண்மையைச் சொன்னால் அது தவறாம். அநீதி இழைப்பவர்களின் உரிமைகளைப் பாதிப்பதாம். என்ன கொடுமையடா இது!!!
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 10 Dec 2010 12:50:38 AM IST
பெங்களூர், டிச.9: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நித்யானந்தா, கொலை மிரட்டல் விடுப்பதாக அவரின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தெரிவித்துள்ளார்.பெங்களூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:2009-ம் ஆண்டில் நித்யானந்தா தொடர்பான சிடியை அவரது உதவியாளர்கள் மூலம் பார்த்தேன். ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறிய பிறகு, போலீஸாரிடம் இது பற்றி புகார் கொடுத்தேன். இதையறிந்த நித்யானந்தா, என்னுடன் பேரம் பேசினார். | 20 கோடி தருவாக ஆசை வார்த்தை கூறினார். யாரிடமும் தெரிவிக்க வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்.நித்யானந்தாவின் செயல்களை மக்களிடம் வெளிச்சம்போட்டு காண்பிக்கவே சிடியை வெளியிட்டேன். என்னிடம் இருக்கும் எல்லா ஆதாரங்களையும் சிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளேன். என்னைப் பற்றி நித்யானந்தா மற்றும் அவரது ஆஸ்ரமத்தினர் பொய்யான புகார்களை தொடர்ந்து கூறி வருகிறார்கள். நித்யானந்தாவின் எல்லா உண்மைகளையும் வெளியில் சொன்னதால், கடந்த ஏப்ரல் முதல் இன்று வரை தொடர்ந்து என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை போலீஸாரிடம் புகாராகக் கொடுத்துள்ளேன். இப்போது போலீஸ் பாதுகாப்பில் இருந்து வருகிறேன் என்றார்.
கருத்துகள்


By rajasji
12/10/2010 2:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/10/2010 2:25:00 AM