௧. இங்கிலாந்து விமான நிலையத்தில் காலை ௭.௦௦ மணி முதல் இரவு ௧௦ மணி வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலைகாரனுக்கு எதிர்ப்பாகக் கூடியிருந்த போதும் ௧௦ காவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றிய தமிழர்களை அந்த அரசே பாராட்டியுள்ளது. சிங்களத் தூதரகத்தை முற்றுகையிட்ட போதும் அதிகாரிகளுக்கு எதிராகத் தாங்கள் போரிடவில்லை எனக் கூறி அவர்களை நலமாக வெறியறே இசைவு தந்துள்ளனர். இதனையும் காவல்துறையினர் பாராட்டியுள்ளனர். மனித நேயம் மிக்கச் சிங்களர்களும் இங்கிலாந்து நாட்டினரும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இவர்களைததான் ஓராள் கொச்சைப்படுத்தி எழுதியுள்ளான். எப்போதடா திருந்துவாய் நீ? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
௨. மலேசிய நா.உ. வேண்டுகோள் சரியானதுதான். இருப்பினும் இங்கிலாந்தில் ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க இந்தியாவே இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் அழைத்துச் சிறப்பு செய்ய ஏற்பாடு செய்யும். இந்தியாவில் மன்மோகனையோ சோனியாவையோ கலைஞரையோ பிற தலைவர்களையோ தாக்கினால் ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனால், பக்சேவி்ற்கு எதிராகப் பேசினால்
சீமான் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் அரைத்தீவு சிங்களத்திற்கு அடியாளாகத்தான் செயல்படுகிறது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சீமான் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் அரைத்தீவு சிங்களத்திற்கு அடியாளாகத்தான் செயல்படுகிறது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கொழும்பு, டிச.4- போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.அந்த அறிக்கையில் குலசேகரன் கூறியிருப்பதாவது:லண்டன் வந்த இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழர்களின் எதிர்ப்பால் தனது சகாக்களுடன் தன் நாட்டுக்கு தப்பிச் சென்றது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் ராஜபட்சவின் உரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இனப்படுகொலை புரிந்த ராஜபட்சவுக்கு உலகின் எந்த நாட்டின் பல்கலைக்கழகங்களிலும் உரை நிகழ்த்த வாய்ப்பு வழங்கக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.இனப்படுகொலை புரிந்த சூடான் அதிபரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுபோல் இலங்கை அதிபர் ராஜபட்சவையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்ப் பெண்களை இலங்கையில் ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. சபை விசாரணையை விரைவுபடுத்தி ராஜபட்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர முயற்சி எடுக்க வேண்டும்.இவ்வாறு தனது அறிக்கையில் மலேசிய எம்.பி. குலசேகரன் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்


By சாமிநாதன் திருத்தணி
12/4/2010 10:42:00 PM
12/4/2010 10:42:00 PM


By usanthan
12/4/2010 10:06:00 PM
12/4/2010 10:06:00 PM


By Also Tamil
12/4/2010 9:59:00 PM
12/4/2010 9:59:00 PM


By காசிமேடு மன்னாரு
12/4/2010 7:52:00 PM
12/4/2010 7:52:00 PM


By Ramasamy
12/4/2010 7:21:00 PM
12/4/2010 7:21:00 PM


By Narayanan-Chennai
12/4/2010 6:23:00 PM
12/4/2010 6:23:00 PM


By ramesh
12/4/2010 5:07:00 PM
12/4/2010 5:07:00 PM


By manoharan
12/4/2010 4:45:00 PM
12/4/2010 4:45:00 PM


By மைந்தன்
12/4/2010 4:23:00 PM
12/4/2010 4:23:00 PM


By Paris EJILAN
12/4/2010 3:36:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/4/2010 3:36:00 PM