சனி, 11 டிசம்பர், 2010

seeman interview against congress

இதே கொள்கையில் சீமான் என்றென்றும் உறுதியாக இருந்தால் போதும். உறுதியாக இருப்பார் என்னும் நம்பிக்கை உள்ளது. காங்கிரசு காணாமல் போவது தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்லாமல் இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்குமே  நல்லது. சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியமையால் இவருக்கு   அரசு  இழப்பீடு தர வேண்டும். தவறாக வழக்கு தொடுத்தவர், வழக்கை வேண்டும் என்றே இழுத்தடித்தவர் ஆகியோர் மீதும்  முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமான் தொண்டு தொடர வாழ்த்தும் அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்First Published : 11 Dec 2010 02:43:06 AM IST

வேலூர், டிச. 10:  காங்கிரஸ் கட்சியை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். அதுதான் எங்கள் கொள்கை என்று வேலூர் மத்திய சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை  விடுதலையான திரைப்பட இயக்குநர் சீமான் கூறினார்.   வேலூர் மத்திய சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த சீமான் வெள்ளிக்கிழமை பிற்பகல் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் சிறைக்கு வெளியில் திரண்டிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.   அதைத் தொடர்ந்து அவர் பேசியது:   5 மாதங்கள் நான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் எனது தொழில் மற்றும் அரசியல் கட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அடக்குமுறை ஒழியும் வரை ஓயமாட்டேன், தொடர்ந்து பேசுவேன். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இரண்டு முறை தவறாக என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். தவறு என்று தெரிந்தும் என்னை சிறையில் அடைத்த தமிழக அரசு மீது வழக்கு  தொடருவேன். சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி சர்வாதிகார போக்கில் அரசு நடந்து கொள்கிறது.   காமராஜர் ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் அமைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன், ஹசன் அலி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார்கள்.   காங்கிரஸை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் எங்கு சென்றாலும் எதிர்ப்பேன். அதுதான் எங்களது கொள்கை.  கருணாநிதி, அவரது மகன்கள் ஸ்டாலின், அழகிரி, மகள் கனிமொழி ஆகியோர் நாட்டு மக்களுக்கு உழைத்தது போதும். அவர்கள் ஓய்வு பெறட்டும். ஊழலற்ற உண்மையான ஜனநாயகம் விரைவில் மலரும் என்றார் அவர். கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் பாலா, மதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன், வேலூர் நகரச் செயலாளர் பழனி, நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக