வியாழன், 9 டிசம்பர், 2010

loss to whom, e.v.k.s.i

கொஞ்ச நாள் கீழ்ப்பாக்கத்தில்  இருந்தார் போலும. நிம்மதியாக இருந்தது. மீண்டும் வந்து விட்டார். செல்வாக்கில்லாமல் ஊடகங்கள் மூலம் செல்வாக்கானவராகக் காட்டுவதில் கில்லாடி. எனினும் காங்.கிற்குச் சாவு மணி அடிக்க முயல்வதால் இவருக்கு நன்றி. பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

யாருக்கு நஷ்டம் என்பது தேர்தலில் தெரியும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

First Published : 09 Dec 2010 02:29:40 AM IST


வேலூர், டிச. 8: காங்கிரஸýடனான கூட்டணியைத் துண்டித்துக் கொண்டால் யாருக்கு நஷ்டம் என்பது தேர்தலின்போது தெரியவரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.வேலூரில் புதன்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடுகள் நடந்து வருகின்றன.வீட்டுவசதி வாரிய ஊழல் புகார் வந்ததும், விசாரணை தொடங்கும் முன் மகாராஷ்டிர மாநில முதல்வர் தார்மிக பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். தற்போது தமிழ்நாட்டிலும் இதே பிரச்னை எழுந்துள்ளது. தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் முன் வருவார் என்று நம்புகிறேன்.சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் பெரியவர்கள் கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது போன்று இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணும். மத்திய அரசிடம்1000 கோடி மழை நிவாரணம் கோரியுள்ளது தமிழக அரசு. ஏற்கெனவே சுனாமியின்போது, மத்திய அரசிடம் வாங்கிய பணத்துக்கு இதுவரை சரியான கணக்கு வழங்கவில்லை.மீண்டும் மீண்டும் குளம் தூர்வாருவது, சாலை போடுவது என்று கூறுகிறது தமிழக அரசு. எத்தனை முறை சாலை போடுவது, குளங்கள் தூர்வாருவது என்று தெரியவில்லை. மக்களுக்கு நேரடியாகச் சென்று சேரும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.அரசியல் தலையீடு என்பது அனைத்திலும் இருந்து வந்தது. தற்போது அரசியல் தலையீடு நீதிமன்றத்திலும் நுழைந்து விட்டது.சில சிரமங்கள் ஏற்பட்டாலும் தமிழகத்துக்கு நல்ல முடிவு வரும். ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒருவர் மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லும்போது, இதில் யார் யார் பின்னணியில் உள்ளனர் என்று பட்டியலை முதல்வர் வெளியிட வேண்டும் என்றார் இளங்கோவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக