நீதித்துறையிலும் ஊழல் இருப்பது உண்மைதான். எனவே பிரசாந்துபூசன் துணிந்து வழக்கை எதிர் கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 08 Dec 2010 02:11:26 AM IST
புது தில்லி, டிச. 7: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார் பிரபல் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். இதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் அல்டமாஸ் கபீர், சிரியாக் ஜோசப், எல்.எல். தத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், செவ்வாய்க்கிழமை கூறுகையில் "தான் கூறிய குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்றுக் கொண்டு மன்னிப்பு கோரினால் பூஷண் மீது தொடரப்பட்ட வழக்கு தானாகவே முடிவுக்கு வந்து விடும். அத்துடன் பிரச்னை முடிந்து விடும்' என்று கூறியது. முன்னதாக இப்போதைய தலைமை நீதிபதி கபாடியா மீதும் முன்னாள் தலைமை நீதிபதிகள் 5 பேர் மீதும் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை பிரசாந்த் பூஷண் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக