வியாழன், 9 டிசம்பர், 2010

ilakkuvanar nuuttraandu vizhaa, valaikudaa senthamizh schangam

வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்குவனார் நூற்றாண்டு விழா


ரியாத், சவுதி அரேபிய வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் சார்பாகக் கடந்த வெள்ளி 08.10.2010 அன்று இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் வ.உ.சி நினைவேந்தல், முருசேசன் தலைமையில், தேனி செயராமன் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.காலை 10 மணி தொடங்கிய விழா இரவு 8 மணி வரை தொடர்ந்தது. ஆண்கள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், தமிழ்ச் சொல் விளையாட்டுகள்- இவற்றில் அனைவரும் பங்கு கொண்டனர்.நாட்டுப்புறப்பாடல்கள், பரத நாட்டியம், ராச ராச சோழன் கோவிலின் 1000 ஆண்டுகள் பற்றிய உரை, 'தமிழ் மறுமலர்ச்சி' என்ற தலைப்பில் வில்லுப்பாட்டும் அரங்கேறின.இலக்குவனார் பற்றிய உரையை பிரான்சிலிருந்து இணைய அரங்கத்தின் மூலம் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவும், சென்னையிலிருந்து இலக்குவனார் திருவள்ளுவனும், வ.உ.சி. பற்றிய செய்திகளைத் தஞ்சையிலிருந்து திரு. திருநாவுக்கரசும் வழங்கிச் சிறப்பித்தனர்.
உலகத் தமிழர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த செய்திகளை புகைப்படங்களுடன் dinamaninews@rediffmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக