வாழ்த்துகள். இரண்டாம் முறையாகப் பரிந்துரைத்த தமிழக அரசிற்கும் ஏற்றுக் கொண்ட மத்திய அரசிற்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 08 Dec 2010 03:47:52 AM IST
தில்லியில் டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றும் ஊழியருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்ட
சென்னை, டிச. 7: மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய, தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குலோத்துங்கனுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி தில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், இந்த விருதை அவருக்கு வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர் அ.து. குலோத்துங்கன். தனது 15-வது வயதில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட இவர், விடா முயற்சி மூலம் உடற் பயிற்சியாளர் படிப்பை முடித்து, 1977-ம் ஆண்டு மருத்துவத் துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.இப்போது பூந்தமல்லி தொழுநோய் அலுவலகத்தில் உடற்பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். தொழு நோயாளிகளுக்கு பயிற்சி அளித்தல், டாக்டர்களுக்கு உதவி செய்தல், கால் புண்களுக்கு சிகிச்சை அளித்தல், நோயாளிகளுக்கு சிறப்பு காலனிகளை பெற்றுத் தருதல் உள்ளிட்ட பணிகளை இவர் செய்து வருகிறார்.இவருடைய சிறந்த பணியை பாராட்டி கடந்த 2002-ம் ஆண்டு இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த 2002-ம் ஆண்டு சிறந்த ஊழியராக தேர்வு செய்யப்பட்ட குலோத்துங்கனுக்கு, அப்போதைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கினார்.இந்த நிலையில், 2010-ம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு இரண்டாவது முறையாக இவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான விருதை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக