ஞாயிறு, 5 டிசம்பர், 2010

அன்னை தெரசாவின்  தொண்டினைப் பாராட்டலாம். என்றாலும் அதன் அடிபப்படை சமய நோக்கு என்பதை மறக்க்க் கூடாது. எனவேதான் அவரை மத்திய அரசு மதித்தாலும் நாடு முழுவதும் விழா எடுக்கும் முடிவிற்கு வரவில்லை. (தேர்தல் நேரத்தில் அச்சமயத்தினர் வாக்கிற்காகக்கூட விழா நடத்தாவிட்டால் பாராட்டலாம்.) மேலும் இலங்கைப் படுகொலைகளுக்கு எதிராக மனித நேய ஆர்வலர்கள் அறிக்கை யொன்றில் கையொப்பம் வேண்டியபொழுது அவர் மறுத்துவிட்டார்.   பக்சே புததப் போர்வையில் உள்ள கிறுத்துவர்தானே. எனவே, அவருக்கு நாடெங்கும் விழா எடுக்காவிட்டால் ஒன்றும் தவறில்லை. ஆனால் தமிழறிஞர்களின் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடுவது என்பது தமிழக  அரசின் கொள்கையாக இருப்பினும்
தமிழ்மொழி வளர்ச்சிக்கும்  இன மேம்பாட்டிற்கும் பாடுபட்ட தமிழறிஞர்களின்
நூற்றாண்டு விழாவைக் கொண்டாடாதது குறித்து யார் முதல்வரிடம் நினைவூட்டுவார்கள்.  (ஆனால் மத்திய அரசு சார்பில் பொதிகைத் தொலைக்காட்சி நூற்றாண்டு கண்டவர்களுக்கு எல்லாம் நிகழ்ச்சியை நடத்துகிறது.) வட நாட்டுச் சமயத் தலைவர்களுக்கு எல்லாம் இந்தியா
முழு வதும் விழா எடுக்கும் மத்திய அரசிடம் நாடெங்கும் திருவள்ளுவர் விழாவைக் கொண்டாட தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்  என்று யார் நினைவு படுத்துவார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக