கண்டிக்கத்தக்கதுதான் மறுப்பதற்கில்லை. ஆனால், சோதனைகளுக்காக உடல் மீது கைபட்டதற்கே பொங்குபவர்கள், ஈழப் பெண்களை வன்முறையில் கற்பழித்தும் கொன்றும் ஆடைகளை அவிழ்த்து மேலும் இழிவு செய்தும் பிறப்பு உறுப்புகளில் வெடிகுண்டு வைத்துத் தகர்த்தும் சிங்களத்தின் இழி செயல்களுக்கு வாய்மூடி இருப்பது ஏன்? தானும் கூட்டாளி என்பதாலா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
புதுதில்லி, டிச.9: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரிடம் சோதனை நடத்தப்பட்டது ஏற்க முடியாதது என்றும் இதை அமெரிக்க அரசிடம் கொண்டு செல்ல இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்த கிருஷ்ணா, இந்திய அரசால் இதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் மீண்டும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.மீரா சங்கர் கடந்த டிசம்பர் 4-ம் தேதியன்று மிஸ்ஸிஸிப்பியில் விமான நிலைய பாதுகாப்பு வரிசையில் இருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் உடல் முழுவதும் சோதனையிடப்பட்டார். தான் தூதர் எனக் கூறியும் அவரிடம் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.மிஸ்ஸிஸிப்பி பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் பால்டிமோர் செல்வதற்காக மீரா சங்கர் ஜாக்ஸன்-ஈவர்ஸ் சர்வதேச விமானநிலையம் வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. விமானநிலைய அதிகாரிகளிடம் தூதரக ஆவணங்களை மீரா சங்கர் காட்டியுள்ளார். எனினும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீரா சங்கரை கைகளால் உடல் முழுவதும் சோதனையிட்டதாக நேரி்ல் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.கடந்த காலங்களில் அமைச்சர்கள் உள்ளிட்ட இந்திய நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் அமெரிக்க விமானநிலையங்களில் இதுபோன்ற சில அசெளகரியங்களை சந்தித்துள்ளனர்.செப்டம்பரில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலின் பிறந்த தேதியும், அமெரிக்காவின் தேடப்படுவோர் பட்டியலில் உள்ள மற்றொரு பிரபுல் படேலின் பிறந்த தேதியும் ஒன்றாக இருந்ததால் அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகளால் அமைச்சர் பிரபுல் படேல் விசாரிக்கப்பட்டார். தற்போது மீரா சங்கரை உடல் முழுவதும் சோதனையிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
(contd)..make necessary measures in order to avoid being snubbed by any illiterates
By Tamil Muslim
12/9/2010 11:53:00 PM
12/9/2010 11:53:00 PM
This is an act of misdemeanor and an insult to our country . An ambassador is a single dignitary who represents for the whole nation. There are certain protocols on how to treat the dignitaries exceptionally from common people during their travel and in the office of a foreign country. It’s an absurd and baseless remark that the former US President was screened by raising hands while entering the while house. If the ambassador’s integrity is questioned, there is no need of having diplomatic relationship. No stupid will expect an ambassador or a foreign minister to be a terrorist suspect. This incident is a cultureless audacity which needs to be taken very seriously. When he had expressed his identity as the ambassador the security official should at least have verified his name against government records and treated him with dignity and respect. In the future the dignitaries’ travel itinerary should be provided to the authorities of the airport concerned in advance and make necessary
By Tamil Muslim
12/9/2010 11:31:00 PM
12/9/2010 11:31:00 PM
இந்தியத் தூதரை நம்பாதது இந்தியாவையே நம்பாததற்கு சமம்! மற்ற பயணிகளை நடத்துவதைப்போல 'DIPLOMATIC(ராஜீய) பாஸ்போர்ட உள்ள பயணிகளை சோதிக்க புரோட்டோகாலில் இடமே இல்லை! தூதர்களை சோதனை செய்வது, சர்வதேச சட்டத்தின்படி மிகப் பெரிய குற்றம்! கொலை செய்தால்கூட ஒரு தூதுவரை நாட்டைவிட்டு வெளியேற்ற முடியுமே தவிர தண்டிக்கமுடியாது! இந்த விதி உலகறிந்தது!இந்த நிகழ்வு யு எஸ் அதிகாரிகளின் அடாவடிததனமே!இது ஒரு திட்டமிட்ட அவமானகரமான சதியே!எந்த அரசுப் பதவியிலும் இல்லாத சோனியா காந்தியை இதுபோல சோதனையிட அமெரிக்க அதிகாரிகளுக்கு தைரியம் உண்டா? இப்படியெல்லாம் நடப்பது தொடர்ந்தால் யார் IAS , IFS பதவிகளில் சேர முன்வருவர்?உடனே யு எஸ் அரசு மன்னிப்பு கேட்காவிட்டால்,அமெரிக்க அதிகாரிகளையும் இதுபோல நடத்தத் துவங்க வேண்டும்! அளவுக்கு மீறி அமெரிக்க அடிவருடியாக செயல்பட்ட இந்தியாவுக்கு ஒரு நல்ல பாடம்!
By மணி
12/9/2010 11:05:00 PM
12/9/2010 11:05:00 PM
Good work...american police.... kaasu kuduthaa etha venaalum seybavargal namma Indian officials....so check each and every one of them.... intha vikku mandayan next time america pona jatti-oda nikka vetchhu check pannunga..kaasu kudutha antha italian mafia family-kaga jatti-kulla kooda bomb vetchu smuggle pannuvaanuga intha congress naayigal....
By ssk@gmail.com
12/9/2010 10:54:00 PM
12/9/2010 10:54:00 PM
இந்திய பண்பாடும் இந்தியர்களும் வெள்ளைத்தோல் மனிதர்களுக்கு எப்போதுமே கிள்ளுக்கீரைத்தான் ராமர் படத்தை லெட்டின் பேஷனில் போடுவாங்க சரஸ்வதி படத்தை மானபங்கம் செய்வாங்க ஆஸ்ரேலியாவில் நம்ம பசங்களை அடிச்சும் உதைப்பாங்க! போதாக்குறைக்கு இந்தியர்கள் சாப்பிடுவதினால்தான் உலகத்தில் உணவு பஞ்சமே வருதுன்னு கதையளப்பாங்க !இந்தியா என்றாலே காட்டுமிராண்டிங்க நாடு பிச்சைக்காரங்க பூமின்னு பிரச்சாரம் செய்தவங்கத்தானே ஐரோப்பிய முதலாளிங்க. இப்போ நம்ம ஊரு புடவையிலும் கை வச்சிருக்காங்க இந்த மாதிரி அநியாயத்தை எல்லாம் பார்த்து நம்ம வீர மறவர்களுக்கு ரோசமா வரப்போகுது?இங்கிலீஷ்காரன் காலைப் பிடிச்சி தூங்குவதில் சுகம் காண்பர்தானே இங்கிருக்கும் துரைமார்கள். இன்னும் எத்தனை அவமானம் வந்தாலும் சிரிப்பாய் சிரித்து காரித்துப்பினாலும் வெற்றிலை மடித்துக் கொடுத்து துப்பும் எச்சிலை கோப்பையில் பிடிக்கும் எட்டையபுரத்து வாரிசுகள் தானே நம்ம கொம்பர்கள் பாவம் மீரா சங்கர்!
By யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி
12/9/2010 10:49:00 PM
12/9/2010 10:49:00 PM
அமெரிக்காவில் தூதராக இருக்கும் மீரா குமார் அவர்களே, அமெரிக்காவில் இருந்துக்கொண்டு, அமெரிக்க வழிமுறைகளை தெரிந்துள்ள நீங்கள், இப்படி பள்ளிக்கூட மாணவர்கள் போல இந்த விஷயத்தை உங்கள் Boss - இடம் முறையிட்டுள்ளீர்களே. அப்துல் கலாம் அவர்களே சோதனை செய்யப்பட்டாரே. அவரென்ன இப்படியா குதித்தார்? கொஞ்சம் யோசித்து செயல்பட கூடாதா? (உங்கள் boss) தான் அரசியல் வாதி, நீங்களாவது அவருக்கு அறிவுரை சொல்லக்கூடாதா?
By மரமண்டை
12/9/2010 10:44:00 PM
12/9/2010 10:44:00 PM
இதற்காக துள்ளி குதிக்கும் பாதுகாப்பு அமைச்சரே, வெளிநாட்டில் இருந்து வரும் இந்திய குடிமக்களை இந்திய அதிகாரிகள் நடத்தும் விதத்தைப் பற்றி எப்போதவது கவலைப்பட்டதுண்டா? அது பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லையே. நீங்கள் தான் அரசியல்வாதிகள், தலைவர்கள், அமைச்சர்கள் என்கிற போர்வையில் சிறப்பு மரியாதையோடு உள்ளே போய் விடுவீர்களே. முதலில் உங்கள் நாட்டு அதிகாரிகள் சொந்த குடிமக்களை தாழ்வாக நடத்தும் விதத்துக்கு ஒரு வழி உண்டாக்கிவிட்டு பிறகு இதைப் பற்றி பேசுங்கள். உங்கள் துதரிடம் அமெரிக்காவில் கடமை செய்தால் அது அவமானம், ஆனால் மக்களை உங்கள் அதிகாரிகள் அவமானப் படுத்தினாலும் அது அவர்கள் கடமை. ஏன்யா இப்படி இருக்கிறீர்கள்?
By மரமண்டை
12/9/2010 10:39:00 PM
12/9/2010 10:39:00 PM
அய்யகோ விமானநிலைய சோதனையையே தாங்கிக் கொள்ள முடியாமல் பொங்கி எழும் உணர்ச்சி உங்களுக்கு எங்கள் மீனவனை அன்னியன் சுட்டுக் கொல்லும் போது வருவதில்லையே ஏன்?
By தமிழன்
12/9/2010 10:39:00 PM
12/9/2010 10:39:00 PM
ஏன்டா விக்கு மண்டையா, தமிழக மீனவர்களை, இலங்கை இனவெறி ராணுவம் சுட்டு தள்ளுவதும், நிர்வானபடுத்தி அடிப்பதையும் நீ பொறுத்துப்ப, ஆனா அந்த வட நாட்டு அம்மாவை சோதன போட்டா உனக்கு வலிக்குதா? என்னே உங்களோட வெளியுறவு கொள்கை, ராஜா தந்திரம்...
By தமிழன் அமுதன்
12/9/2010 9:47:00 PM
12/9/2010 9:47:00 PM
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று பேச்சளவில் சொல்வதும் ஆளைக்கேற்றார் போல் சட்டத்தை வளைப்பதும் இந்தியாவில் சாதாரணமாக இருக்கலாம். தூதராக இருந்தால் அவரிடம் சோதனை செய்யக்கூடாது என்று அமெரிக்க சட்டத்தில் சொல்கிறதா. பொது மக்கள் பாதுகாப்பு கருதி அனைவரையும் சோதனை செய்வது பாதுகாப்பு அதிகாரிகளின் கடமை. இதற்காக கிருஷ்ணா இப்படி துள்ளி குதிப்பது தேவை இல்லாத ஒன்று. தன் சொந்த நாட்டு மீனவர்களையே எதிரிகளிடமிருந்து பாதுகாக்க முடியாது என்று சொல்லி ஒழுங்காக உங்கள் கடமையை செய்யாத "பாதுகாப்பு அமைச்சரே", அமெரிக்கர்களையாவது அவர்களை கடமையை செய்ய விடுங்கள். சோதனை செய்தது முற்றிலும் சரியே! கிருஷ்ணாதான் அடக்கி பேச வேண்டும்.
By மரமண்டை
12/9/2010 9:39:00 PM
12/9/2010 9:39:00 PM
mr krishna what will you do? you are already a slave of the italian who is acts under the directions of the western powers pope and the usa.you are a shameless person and would keep quiet even if you are searched by the haughty americans
By karunganni
12/9/2010 9:31:00 PM
12/9/2010 9:31:00 PM
இந்தியாவில் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.களில் பாதிக்குமேல் கிரிமினல்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஊழல் அமைச்சர்களின் எண்ணிக்கையும் ஊழல் அதிகாரிகளின் எண்ணிக்கையும் கணக்கில் அடங்காது.ஏதோ சி பி ஐ யின் புண்ணியத்தில் இவர்கள் குற்ற மற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். நம் நாட்டு சட்டப்படி இவர்கள் நேர்மையானவர்களாக அர்விக்கப்படலாம் ஆனால் அமெரிக்கர்கள் நம்மவர்களை எப்படி நம்புவார்கள்.குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் என்றால் அவன் மேல் நடவடிக்கை கூடாது என்கிறார் கலைஞர் வருபவன் என்னஜாதிக்கரன் என்று அமரிக்கா காரன் எப்படி தெரிந்துகொள்வான்
By குரங்கன்
12/9/2010 9:20:00 PM
12/9/2010 9:20:00 PM
கையாலாகத காங்கரஸ் அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று சரிஇருக்கட்டும். ஒரு இந்திய அதிகாரிக்கு அவமானம் ஏர்பட்டால் அறிக்கைவிடும் அமைச்சர் இந்தியா அதிகாரிகளால் அவமானபடுத்தபடும் சாதாரண இந்தியாகுடிமகன் யாரிடம் முறையிடுவது
By ரிஜி.கரியப்பட்டினம்
12/9/2010 8:59:00 PM
12/9/2010 8:59:00 PM
இனிமேலாவது வெலீநட்டவர் நம்ம ஊருக்கு வந்த மலை & போட்டு வைத்து நம்ம கலாச்சாரத்தை கேவலபடுத்தவேண்டாம்...
By பஹுருதீன்
12/9/2010 8:06:00 PM
12/9/2010 8:06:00 PM
பாதுகாப்பு சோதனைகளை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். இங்கு இந்தியாவில் சோதனைடவில்லை என்பதற்காக மற்றவர்களை குறை சொல்ல கூடாது. இப்போதுதான் தெரிகிறது, இங்கு (இந்தியாவில்) ஏன் குண்டு வெடிக்கிறது, அங்கு (அமெரிக்காவில்) வெடிக்கவில்லை என்று... இனிமேலாவது இந்தியா வரும் ஒபாமா முதல் சாதாரண குடிமகன் வரை ஒழுங்காக எல்லோரையும் சோதனையிட்டு மக்களை காப்பத்துங்கப்பா...
By வெற்றிவேலன்
12/9/2010 8:06:00 PM
12/9/2010 8:06:00 PM
இது போல் எல்லா அமெரிகர்களையும் சோதனை செய்ய வேண்டும் ( ஒபாமா உட்பட).
By ஸ்ரீ மணிகண்டன்
12/9/2010 7:21:00 PM
12/9/2010 7:21:00 PM
போடா வெண்ணை (கிருஷ்ணா) வெளிநாட்டில் இந்திய தூதரக அதிகாரிகள் இந்தியருக்கு பண்ணும் மரியாதையை சொல்லி மாளாது. சென்னை சாஸ்திரி பவன் பாஸ்போர்ட் அலுவலகமே மேல் இதை யரரிடம் சொல்வது.
By murugavel
12/9/2010 7:16:00 PM
12/9/2010 7:16:00 PM
சென்ற மாதம் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகைக்குப் போனபோது அவரையும் கையைத் தூக்கச் சொல்லி சோதனை செய்தனர். பாதுகாப்பு விதிகளுக்காக அமெரிக்கா செய்வது வழக்கம்தான். ஆனால், இந்தியக்கலாச்சாரம் (???) சிலருக்கு உறுத்துகிறது. இது மேல்நிலையில் பேசித்தீர்க்க வேண்டிய விஷயம். ’வருமுன் காப்போம்’ என்ற அறிவு இந்தியருக்கு எப்போதுமே இருந்ததில்லை. இப்படி நிகழ்வு வருவதற்கு முன்பே நினைத்துப்பார்த்து மேல்மட்ட நிலையில் பேசி ஏற்பாடு செய்திருந்தால் திருமதி மீரா சங்கருக்கு ஏற்பட்ட நிகழ்வைத் தவிர்த்திருக்கலாம். எல்லாம் பட்டால்தான் தெரிகிறது. அமெரிக்காவை ஒருவிரல் நீட்டிக் குறைகூறும்போது, மற்ற நான்கு விரல்கள் யாரைச் சுட்டுகிறது என்று யோசித்தால் நல்லது.
By குனியா மனிதன்
12/9/2010 6:55:00 PM
12/9/2010 6:55:00 PM
ஏற்க முடியாது என்றால் என்ன செய்ய போகிறீர்கள்........பேசாம உருப்படுற வேலைய பாருங்கப்பா....
By சுனில்
12/9/2010 6:09:00 PM
12/9/2010 6:09:00 PM
Why should our External Affairs minister beat around the bush and behave like one asking favour from his Master? Just ask all high level officials of Indian High Commission to leave US at once as a mark of our protest to show it in strong way. US high handedness is growing out of bounds, with Indians' top officials and dignitaries( ex: making Dr. Abdul Kalam to undergo severe checks). To teach those US beggars- next-time, thoroughly check Hillary Clinton, US ambassador & others for hrs. together.
By ASHWIN
12/9/2010 5:01:00 PM
12/9/2010 5:01:00 PM
This is strongly condemnable. It shows that Americans have found India very vulnerable for snubbibng. Recurrence of these kinds of episodes in the US must be severyly dealt with by India.
By Indian
12/9/2010 4:55:00 PM
12/9/2010 4:55:00 PM
அமெரிக்காவில் எல்லாம் ஆண்டி முதல் அரசன் வரை எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்,,அது தூதராக இருந்தாலும் சரி, குளத்தில் தூர் வாருபவாருக இருந்தாலும் சரி,,,எல்லோருக்கும் கொடுக்கும் அதே மாதிரியான மரியாதையை இவரும் ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்,,, ஒரு உதாரணத்திற்கு நான் கேட்கிறேன்,,,உ பியில் ஒரு தலைமை செயலாளர் 5000 கோடியளவில் ஊழல் செய்யும் போழ்து, இந்தியாவைச் சேர்ந்த தூதர் ஏன் தீவிரவாதியாக இருக்க முடியாது?
By கணேசன் கிருஷ்ணமூர்த்தி
12/9/2010 4:42:00 PM
12/9/2010 4:42:00 PM
கொஞ்சமாவது உப்பு போட்டு தின்னுங்கடா! அமெரிக்காவிலிருந்து வரும் நாய்க்கு கூட ராஜ உபசரிப்பு, பாதுகாப்பு- இங்கிருந்து அங்கு போனால் தூதருக்கு கூட அவமதிப்பு - வெட்கமாயில்லே
By Umaiyan
12/9/2010 4:39:00 PM
12/9/2010 4:39:00 PM
மீரா சங்கரை சோதனை செய்வது அமெரிக்கரின் பிறப்பு உரிமை. உன்னால் முடிந்தால் அமெரிக்கரை சோதனை செய்து பார். ஒபாமா
By apobama
12/9/2010 4:04:00 PM
12/9/2010 4:04:00 PM
அமெரிக்க எஜமானர்கள் வழக்கமாக செய்யும் சீண்டல்கள் தானே இது? இது போன்ற அவமரியாதை செயல்களை அமெரிக்க அடிமைகளான நாம் தாங்கித்தானே ஆக வேண்டும் கிருஷ்ணாஜி? தினமணியும் தன்னுடைய பங்கிற்கு அயலுறவுத்துறை அமைச்சரை துறைச்செயலாளர் என சொல்லி நக்கலடிக்கிறதோ? -தனசேகரன்
By Dhanasekaran
12/9/2010 3:55:00 PM
12/9/2010 3:55:00 PM
கிருஷ்ணா அவர்களே இந்தியர்கள்தான்(இந்திய அரசு உட்பட) அமெரிக்காவை சுவர்க்கபுரி என்று நினைத்துக்கொண்டு அவமானத்தையும், சுயகெளவுரவத்தையும், தன்மானத்தையும் விட்டு வெகு நாட்களாகிறது. அமெரிக்கர்களை இந்திய விமான நிலையங்களில் இதே சோதனைக்களுக்குட்படித்தினால் மட்டுமே அமெரிக்கர்களிக்கு அந்த வலி புரியும்.
By தஞ்சை ராஜு
12/9/2010 3:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/9/2010 3:53:00 PM
First Published : 10 Dec 2010 12:47:52 AM IST