சென்னை, டிச. 4: அன்னை தெரசாவின் நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாட மத்திய அரசு தவறிவிட்டது என்று முதல்வர் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார்.அன்னை தெரசா விழாவில் அவர் சனிக்கிழமை பேசியதாவது: அன்னை தெரசாவின் அரும்பெரும் தியாகத்தைப் போற்றி, அவர் வழி நடப்பதாக நாம் உறுதி எடுத்துக் கொண்டால் மட்டுமே போதாது. எடுத்துக் கொண்ட உறுதியை காற்றிலே பறக்கவிடாமல், தேர்தல் கால வாக்குறுதியாக ஆக்காமல் என்றென்றும் அந்த உறுதிமொழியை நன்றியுடன் நினைத்து நிறைவேற்றுவோம், நடைமுறைப்படுத்துவோம் என்று நானும் உங்களுடன் சேர்ந்து உறுதியேற்கிறேன்.முதன்முதலில் முதல்வராகப் பொறுப்பேற்று பேரவையில் உரையாற்றியபோது மிக, மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான். இதில் எத்தனை மிக, மிக என்று வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் அந்தச் சமுதாயத்தின் வெற்றிக்காகப் போராடுவேன், வெற்றி கிடைக்கும்வரை ஒயமாட்டேன் என்று சூளுரை மேற்கொண்டேன்.சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த நான் அந்தச் சமுதாயத்தின் நலனுக்காக, உலகத்தின் அன்னை என்று போற்றப்படும் தெரசாவின் நூற்றாண்டு விழா கொண்டாட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க முடியாது.ஏழைகளைக் கண்டு இரங்கிய மாதரசி அவர். அன்னை தெரசா என்று ஒருவர் மட்டுமே இருக்க முடியும். வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் தரிசாக இருக்கிறது. நலிந்தோருக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் தெரசா. உலகுக்கே அன்னையாக விளங்கிய அவரது புகழுக்கு அவர் பெற்ற விருதுகளே சான்று. அவருக்கு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே ஒரு நாளை தேர்வு செய்து நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. அவருக்கு இந்த விழா போதாது.இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் இந்த விழா நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், மத்திய அரசை விட்டுக் கொடுக்காமல், ""அன்னை தெரசாவின் நினைவாக நாங்கள் நாணயத்தை வெளியிட்டுள்ளோம்'' என்றார்.நாணயத்தை வெளியிடுவது மாத்திரம் அல்ல. நாடு முழுவதும் அன்னை தெரசாவின் விழாவைக் கொண்டாடியிருக்க வேண்டும்.தமிழக அரசைப் பொறுத்தவரை, ஒரு பெரிய கட்டடத்துக்கு தெரசாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தெரசாவின் புகழ் நிலைக்க வேண்டும் என்பதற்காக, ஆதரவற்ற பெண்களின் திருமண உதவியாக ரூ. 25 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கும் ஏற்கெனவே அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்த டாக்டர் ராய் தனது பிறந்தநாள் செய்தியில், ""என்னை முழுவதுமாக காந்தி, நேரு மற்றும் எனது நெருங்கிய உறவினர்கள் கூட ஆக்கிரமித்துக் கொண்டதில்லை. ஆனால், ஏழைகளின் துயர்நீக்கப் பாடுபடும் அன்னை தெரசா குறித்த நினைவும், எண்ணமும் எனது இதயம், மூளை அனைத்தையும் அணைத்துக் கொண்டது'' என்று தெரிவித்துள்ளார்.அந்த வங்கத்தில் இந்த விழாவைக் கொண்டாடவில்லையே என்று யாரும் வருத்தப்படத் தேவை இல்லை. நாம் விழா கொண்டாடுவதும் வங்கம் கொண்டாடுவதைப் போலத்தான். ஏழை, எளியோரை, பாட்டாளிகளை மனிதர்களாக மதிக்க வேண்டும் எனபதே தெரசாவின் கொள்கை ஆகும். அந்தக் கொள்கையை மதித்து நடப்பதால் அவருக்கு விழா கொண்டாட நமக்குத் தகுதி இருப்பதாக நாமே கருதுகிறோம். தெரசா வாழ்ந்து, மக்களுக்காக பாடுபட்ட மேற்கு வங்கத்தில் இன்னமும் கை ரிக்ஷா வண்டிகள் ஓடுகின்றன. ஆனால், தமிழகத்தில் அவற்றுக்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷா வண்டிகள் இயக்கப்படுகின்றன. எனவே, தகுதியோடு இந்த விழாவைக் கொண்டாடுகிறோம். நம் அளவுக்கு சில மாநிலங்கள் கொண்டாடா விட்டாலும் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் இந்த விழாவைக் கொண்டாட வேண்டும். நான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்றாலும், மனித தெய்வமாக வணங்கக் கூடியவர் அன்னை தெரசா' என்றார் முதல்வர் கருணாநிதி.முன்னதாக அன்னை தெரசாவின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.
கருத்துகள்


By தமிழன்
12/5/2010 12:41:00 PM
12/5/2010 12:41:00 PM


By basarie
12/5/2010 12:40:00 PM
12/5/2010 12:40:00 PM


By சாமி
12/5/2010 12:22:00 PM
12/5/2010 12:22:00 PM


By sekar
12/5/2010 11:34:00 AM
12/5/2010 11:34:00 AM


By MUTHU
12/5/2010 11:25:00 AM
12/5/2010 11:25:00 AM


By Es
12/5/2010 10:46:00 AM
12/5/2010 10:46:00 AM


By Umashankar. K
12/5/2010 10:15:00 AM
12/5/2010 10:15:00 AM


By மு. ச. chagla
12/5/2010 9:34:00 AM
12/5/2010 9:34:00 AM


By imran
12/5/2010 9:28:00 AM
12/5/2010 9:28:00 AM


By Pandiyan
12/5/2010 9:19:00 AM
12/5/2010 9:19:00 AM


By இளந்தளிர் - மதுரை
12/5/2010 8:50:00 AM
12/5/2010 8:50:00 AM


By Indian
12/5/2010 8:30:00 AM
12/5/2010 8:30:00 AM


By SRV
12/5/2010 7:49:00 AM
12/5/2010 7:49:00 AM


By மரமண்டை
12/5/2010 6:56:00 AM
12/5/2010 6:56:00 AM


By மரமண்டை
12/5/2010 6:53:00 AM
12/5/2010 6:53:00 AM


By அண்ணா துரை
12/5/2010 6:52:00 AM
12/5/2010 6:52:00 AM


By mpm
12/5/2010 5:54:00 AM
12/5/2010 5:54:00 AM


By Jothi
12/5/2010 5:34:00 AM
12/5/2010 5:34:00 AM


By Cholan
12/5/2010 5:32:00 AM
12/5/2010 5:32:00 AM


By துரை
12/5/2010 5:23:00 AM
12/5/2010 5:23:00 AM


By Ilakkuvanar Thiruvalluvan
12/5/2010 5:21:00 AM
12/5/2010 5:21:00 AM


By swathi
12/5/2010 4:41:00 AM
12/5/2010 4:41:00 AM


By tamilan
12/5/2010 4:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/5/2010 4:40:00 AM