வெள்ளி, 10 டிசம்பர், 2010

human rights day : tamil eezham on exile

மனித உரிமைகள் தினம்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிக்கை

First Published : 10 Dec 2010 05:42:07 PM IST


ஜெனீவா, டிச.10- சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கொண்டாடப்படுகின்ற நிலையில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கேட்டுக் கொண்டுள்ளது..அதன் இனஒழிப்பு, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்ற விசாரணைக்கான அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இன்று அனைத்துலக மனித உரிமைகள் தினத்தை நினைவு கூருகின்ற, உலகெங்குமுள்ள பல்லாயிரம் மக்களுடன் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கமும் இணைந்து கொள்கிறது. யூதர்களைப் போன்று ஈழத்தமிழர்களும் இனக்குழுமம் என்னும் அடிப்படையிலே பெரும் தொகையாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒரு மாத காலத்தில் மட்டும் முள்ளிவாய்க்கால் பகுதியில் 60 ஆயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் மீது மீண்டும் மீண்டும் குண்டுகள் போடப்பட்டன. போர் பகுதியில் அகப்பட்டுக்கொண்ட தமிழர்களுக்கு உணவு போகாமல் தடுக்கப்பட்டது. அத்துடன் உணவும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. பலர் பட்டினியால் இறந்தனர். பல பெண்கள் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்கள். இலங்கை அரசாங்கமானது இன அழிப்பு, போர்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் புரிந்த குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் கடந்த சில மாதங்களில் பெருமளவில் வெளிவந்துள்ளன. சுதந்திர அரசு ஒன்றினை நிறுவுவதன் மூலமே ஈழத்தமிழர்கள் தங்களை அழிவிலிருந்து காப்பற்றிக் கொள்ளமுடியும் என்ற உண்மை நிலையை இன்னும் எவ்வளவு காலத்திற்கு அனைத்துலக சமுதாயத்தினால் புறம்தள்ள முடியும்?மனித உரிமைகளுக்கான சர்வதேச தினத்தில் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கமானது, இனப் படுகொலை, போர்குற்றம், மனித சமுதாயத்திற்கு எதிரான படுகொலை புரிந்தவர்களை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக சுதந்திரமான சர்வதேச விசாரணை சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

மிகச் சரியான அறிக்கை. உலகம் உண்மையைப் புரிந்து கொண்டு வருகின்றது. விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும். தமிழ் ஈழம் தனியரசாய் மலரும். தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஈழக் குடியரசு அமையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/10/2010 8:21:00 PM
A SEPRATE MOTHERLAND WILL ONLY SAVE TAMIL PEOPLE FROM FURTHER DEATH. ALL DIRECT AND INDIRECT ACTORS INVOLVED IN THE TAMIL GENOOCIDE SHOULD BE PUNISHED
By Paris EJILAN
12/10/2010 7:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக