வியாழன், 9 டிசம்பர், 2010

wickyleaks functon from france

உண்மை எங்கிருந்தாவது ஒலிக்கட்டும்! வலலரசுகளின் முகமூடிகள் கிழியட்டும்! வலலரசுகளின் வஞ்சகங்களும் அழியட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பிரான்ஸ் நாட்டில் செயல்படுகிறது விக்கிலீக்ஸ்

First Published : 08 Dec 2010 07:22:59 PM IST


பாரீஸ், டிச.8- விக்கிலீக்ஸ் இணையதளம் பிரான்ஸ் நாட்டில் இருந்து செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடந்த வாரம் முதல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓவிஹெச் என்னும் இணைய சேவை நிறுவனம் மூலம் விக்கிலீக்ஸ் செயல்படுகிறது. இந்நிலையில், பிரான்ஸில் இருந்து விக்கிலீக்ஸ் செயல்படுவதை தடுப்பது குறித்து ஆராய அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் எரிக் பெஸன் உத்தரவிட்டார். இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் தொழில்நுட்ப பிரச்னைகளும் அடங்கியிருப்பதால் இதுகுறித்து உடனடியாக முடிவு எடுக்க முடியாது என்றும் கூடுதல் அவகாசம் தேவை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக