இனிமையான தமிழ் மொழியைத் தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கற்றுத்தர தில்லி முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 11 Dec 2010 04:32:09 PM IST
Last Updated : 11 Dec 2010 05:16:47 PM IST
புதுதில்லி, டிச.11- தமிழ் மிகவும் இனிய மொழி என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் "தமிழ் 2010" கருத்தரங்கம் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்."நான் தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு வருவது இது 5-வது முறை. இதற்கு முன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்கு வந்தேன். அப்போது தமிழக முதல்வர் கருணாநிதியும் வந்திருந்தார்.எனக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது மருமகள் சென்னையைச் சேர்ந்தவர். மேலும், எனக்கும் எனது கணவருக்கும் ஏராளமான தமிழ் நண்பர்கள் உள்ளனர்.இந்தியாவிலேயே சமூகப் புரட்சியை ஆரம்பத்திலேயே கொண்டு வந்தவர் பெரியார் என்பதை நான் நன்கு அறிவேன். அத்தகைய சமூக சீர்திருத்தவாதிகள் எண்ணற்றோரைத் தந்தது தமிழகம்.தமிழ் மிகவும் இனிய மொழி. ஆனால், கற்பதற்கு சற்று கடினமான மொழியாக உள்ளது.தில்லி தமிழ்ச் சங்கத்தின் கருத்தரங்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.இவ்வாறு தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக