வியாழன், 18 மார்ச், 2010

மருத்துவமனையில் கவுண்டமணி



சென்னை, மார்ச் 16: பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் கவுண்டமணி, சென்னை தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த அவர் திங்கள்கிழமை இரவு திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
"கவுண்டமணிக்கு இதய நோய் சம்பந்தமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார்' என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்கள்

முல்லை என்பது கற்பின் அடையாளம். முல்லை மைந்தன் என்ற பெயரை மாற்றிக் கொண்டு பண்பாடற்ற பதிவையும் நீக்குவதே சிறந்தது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (நேற்றுதான் அவர் மனைவி இச்செய்தியை மறுத்ததாகச் செய்தி வந்தது. நலக் குறைவைக் குறிப்பிடுவதில் என்ன இழிவு என எண்ணினார் அவர் எனத் தெரியவில்லை. விரைவில் நலம் பெறட்டும்!)

By Ilakkuvanar Thiruvalluvan
3/18/2010 2:43:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக