தமிழரல்லாதவர்களுக்குத் தமிழர்கள் வரிப்பணத்தில் நினைவு மண்டபங்கள் எழுப்பப்டுகின்றன. இருப்பினும் தமிழ் நாட்டவர் என்னும் பெருந்தன்மையுடன் தமிழர்கள் இவற்றை ஏற்கின்றனர். தமிழினத்தலைவர்களையும் சிறப்பு செய்ய வேண்டும். 2.) சாதிப்பற்றின் காரணமாக (பிராமணர் தெருவில் இறுதி ஊர்வலத்திற்கு இசைவு அளித்த) ஆட்சியாளர் ஆசு என்பாரைச் சுட்டுக் கொன்றவரை ஆரியர் என்பதால் நாம் விடுதலை வீரராக ஏற்கிறோம். ஆனால், எண்ணற்ற படுகொலைகளைப் புரிவோரை எதிர்க்கும் போராளிகளை அவர்கள் தமிழர்கள் என்பதற்காக நாம அழிக்கிறோம். என்னே முரண்பாடு! என்று திருந்தும் இந்த நாடு! நம் நாட்டுப் போரளிகளை மதிக்கும் நாம் அயல்நாட்டுப் போராளிகளையும் மதிப்போமாக! நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் அயலவரை எதிர்க்கும் நாம் அயலநாட்டில் ஆதிக்கம் செலுத்த எண்ணும் நம் நாட்டு ஆட்சியாளரையும் எதிர்ப்போமாக! உலகம் உய்வதற்காகத் தம்மையே இழக்கும் போராளிகள் வெல்க! போராளிகளுக்கு வேலையின்றி உரிமையும் மனித நேயமும் இலங்கும் மன்பதை உருவாகுவதாக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/20/2010 3:28:00 AM