வேலூர், மார்ச் 15:ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தமிழை செம்மொழியாக அறிவிக்க கோரிக்கை விடுத்த பரிதிமால் கலைஞருக்கு (சூரிய நாராயண சாஸ்திரி) சென்னையில் மணி மண்டபம் எழுப்ப வேண்டும் என தென்னிந்திய புரோகிதர்கள் சங்கம் கோரிக்கை தீர்மானம் நிறை
வேற்றியது.
வேலூரில் சங்கத்தின் வேலூர் மாநகரக் கிளை 3-ம் ஆண்டு தொடக்க விழா, 8 சிறுவர்களுக்கு இலவச கூட்டு பூணூல் அணிவிக்கும் விழா, தமிழக அரசின் எல்லைக் காவலர் விருது பெற்ற தென்னிந்திய புரோகிதர்கள் சங்க நிறுவனப் பொதுச் செயலாளர் ஆர்க்காடு ஆ.செ.நரசிம்ம புரோகித்துக்கு பாராட்டு, வேலூர் திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் புரோகிதர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா, மூத்த புரோகிதர்களை கெüரவித்தல், நலிந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய நிர்வாகிகள் தேர்தல், விக்ருதி வருஷ பஞ்சாங்க வெளியீடு ஆகிய 7 பெரும் விழா
நடைபெற்றது.
வேலூர் எம்.எல்.ஏ. சி.ஞானசேகரன், தென்னிந்திய புரோகிதர்கள் சங்க நிறுவனப் பொதுச் செயலாளர் ஆ.செ.நரசிம்மஐயர், பொருளாளர் கே.கோபால் ஐயர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
புரோகிதர்கள் நல வாரியம் அமைக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். புரோகிதர்களுக்கு தமிழக அரசின் மூலம் இலவச வீடு கட்டித் தர வேண்டும்.
புரோகிதர்களுக்கு மிதிவண்டி வழங்க வேண்டும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தமிழை செம்மொழியாக அறிவிக்க முதலில் கோரிக்கை விடுத்த முதல் தமிழர் (சூரிய நாராயண சாஸ்திரி) பரிதிமால் கலைஞருக்கு சென்னையில் மணிமண்டபம் கட்டி சிலை நிறுவி, அவரது வாரிசுகளுக்கு நலத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழா ஏற்பாடுகளை மேல்பாடி குமார், துணைத் தலைவர் நடராஐயர், வேலூர் மாநகரக் கிளைச் சங்கத் தலைவர் வி.சீத்தாராமய்யர், செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர் பி.சேகர் மற்றும் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சமற்கிருதத்தைத் தூக்கி எறிந்து விட்டு நம் செந்தமிழைக் கோயில்களில் நுழையச் செய்வதே பரிதிமாற் கலைஞருக்குப் புரோகிதர்கள் செய்ய வேண்டிய நன்றிக் கடனாகும். பிறவற்றைத் தமிழக அரசும் தமிழக அறிஞர்களும் பார்த்துக் கொள்வார்கள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/17/2010 3:23:00 AM
பரிதிமால் கலைஞர் அவர்கள் பிறந்த வீட்டை அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது;திருவுருவப் படிமம் திறந்து வைக்கப்பட்டுள்ளது; அஞ்சல் தலை வெபளியிடப்பட்டுள்ளது; செம்மொழி மாநாட்டிலும் நினைவு கூரப்படு கிறார்.ஆனால்.மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது கோரிக்கை வைப்போரின் தோரணை ஆகி விட்டது. பாவாணர் மணிமண்டபம், கம்பன் மணி மண்டபம் மாதிரிதான் இவருக்கு மண்டபம் எழுப்பினால் எப்பயனும் விளையப் போவது இல்லை. மாறாக அவர் பணியாற்றிய கல்லூரியில் ஒரு கட்டடத்திற்கு அல்லது அரங்கத்திற்கு அல்லது அரசு கட்டடம் ஒன்றிற்கு அவர் பெயரைச் சூட்டலாம். எனினும் இது போன்ற கோரிக்கையைத் தென்னிந்தியப் புரோகிதர்கள் தெரிவிப்பது அத் தமிழறிஞரைக் கொச்சைப் படுத்துவதாகும். அவர் கருத்தையும் புகழையும் பரப்ப எள்ளளவும் உடலுழைப்பு தராதவர்கள் சாதி அடிப்படையில் அவரை அடையாளம் காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுவே அவர் செய்ய வேண்டிய முதற் பணியாகும்.சமற்கிருதத்தைத் தூக்கி எறிந்து விட்டு நம் செந்தமிழைக் கோயில்களில் நுழையச் செய்வதே பரிதிமாற் கலைஞருக்குப் புரோகிதர்கள் செய்ய வேண்டிய நன்றிக் கடனாகும். பிறவற்றைத் தமிழக அரசும் தமிழக அறிஞர்களும் பார்த்து
3/17/2010 3:22:00 AM
Thambi devanathan engappa pona??????????
3/16/2010 4:51:00 PM