சென்னை, மார்ச் 15: கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 50 முக்கிய சாலைகளுக்கு தமிழறிஞர்களின் பெயர்களைச் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் 2010}2011}ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்து மேயர் மா. சுப்பிரமணியன் கூறியது:
1968}ல் சென்னையில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் தமிழறிஞர்களின் சிலைகள் நிறுவப்பட்டன.
இதுபோல் இப்போது கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 50 முக்கிய சாலைகளுக்கு தமிழறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.
சென்னை மாநகராட்சி ஆற்றியுள்ள சிறப்புப் பணிகளான கல்வி, சுகாதாரம், குடும்பநலம், அழகிய பூங்காக்கள், பாலங்கள் ஆகியவற்றைச் சித்திரிக்கும் வகையில் அலங்கார ஊர்தி ஒன்று மாநகராட்சி சார்பில், கோவை செம்மொழி மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் திருவள்ளுவரைப் போற்றும் வகையில் "வாயில் தோறும் வள்ளுவம்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சியின் அனைத்து அலுவலகங்களின் வாயில்களிலும் ஒரு திருக்குறள் அதன் பொருளோடு, நிரந்தரப் பலகையில் பொறித்து வைக்கப்படும் என்றார்.
வாயில் தோறும் வள்ளுவம் என்பது பாராட்டக் கூடிய முயற்சி. பிறரும் இதனைப் பின்பற்ற வேண்டும். 2) ஒயிட்சு சாலை என்பதை வெள்ளைக் குடி நாகனார் சாலை என்றும் பிளாக் தெருவைக் கார் நாற்பது தெரு அல்லது காரியாசான் தெரு என்றும் இவை போன்று பிற மொழி பெயர் தாங்கிய தெருக்களின் பெயர்களையும் சாதிப் பெயர் தாங்கிய தெருக்களின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்று முன்பே நான் தெரிவித்து இருந்தேன். எனவே, 50 தமிழறிஞர்கள் பெயரைச் சூட்டுவதற்குப் பாராட்டுகள். எனினும் 50 என்னும் இலக்கு இல்லாமல் சாதிப் பெயர் தாங்கிய, பிற மொழிப் பெயர் தாங்கிய அனைத்துத் தெருக்களின் பெயர்களையும் மாற்ற வேண்டும். 3) இலக்கிய நூல்களின் பெயர்களையும் , தொல்காப்பியத் தெரு, குறிஞ்சிப் பாட்டுத் தெரு என்பன போன்று சூட்ட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/16/2010 7:15:00 AM
IT WILL TAKE DECADES BEFORE THE NAMES OF TOM,DICK AND HARRY WILL GET FAMILIARISED. IT IS ALL UNWANTED THINGS DONE IN KARUNA;S STYLE. ANYWAY TAMIL NADUPEOPLE ARE USED TO HIS QUIXATIC BEHAVIOUR.s
3/16/2010 7:12:00 AM