சனி, 20 மார்ச், 2010

தமிழகத்தில் அடுத்து காங்கிரஸ் ஆட்சிதான்



ஆரணி, மார்ச் 19: தமிழகத்தில் அடுத்து காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று ஆரணி மக்களவை உறுப்பினர் எம்.கிருஷ்ணசாமி கூறினார். ஆரணியில் நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது: ஆரணியில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மார்ச் 28-ல் நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பங்கேற்கிறார். தற்போது இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமை பெற்று வருகிறது. அடுத்த ஆட்சி காங்கிரஸ் ஆட்சிதான். தற்போது இளைஞர்கள் மத்தியில் ராகுல்காந்திக்கு பெரும் வரவேற்பு உள்ளது. ஆகையால் இளைஞர்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கொள்கை, செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் ராகுலின் அணுகுமுறை ஆகியவை இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர தூண்டுகிறது. இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தேர்தல் வருவதற்குள் மீண்டும் ராகுல்காந்தி தமிழகம் வருவார். ராகுல்காந்தி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்வதன் மூலம் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.மாவட்டத் தலைவர் டி.பி.ஜே.ராஜாபாபு, மாநில சிறப்பு அழைப்பாளர்கள் பி. கருணாமூர்த்தி, அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர் ஏ.பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, ஆரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மார்ச் 28-ம் தேதி நடைபெறவுள்ள மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணசாமி பங்கேற்றார்.
கருத்துக்கள்

கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு. அதுவும் ஒவ்வொரு காங்கிரசு எடுபிடிகளும் தங்களை வருங்கால முதல்வர எனக் கனவு காண்பதிலும் தடையில்லை. ஆனால் அனைவரையும் திடீரென்று சேர்க்க விரும்பினால் கீழ்ப்பாக்கத்தில் இடம் இருக்காது. கூரைஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம். அப்படித்தான் கனவு உள்ளது. கூட்டணி ஆட்சியில் பதவி வாங்கத் தெரியாதவர்கள தனித்து ஆட்சி அமைக்கப் போகிறார்களாம். இந்தியாவிலும் ஈழத்திலும் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடராதிருக்க காங்கிரசு அடியோடு மண்ணைக் கவ்வ வேண்டும். இந்தியா வலிமையான கூட்டரசு நாடாகத் திகழ காங்கிரசுக் கட்சி இந்தியாவில் இருந்த இடம் தெரியாமல் போக வேண்டும். அதில் மனித நேயம் மிக்கவர்கள் இருப்பின் அதனை விட்டு வெளியேற வேண்டும். காங்கிரசு மறைந்த இந்தியா துன்பம் மறைந்த இந்தியா!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 10:26:00 AM

Mudiyala..............

By raj
3/20/2010 10:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக