புதன், 17 மார்ச், 2010

மார்ச் 16,2010,16:35 IST

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தமிழர் சங்கம், தமிழவேள் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் எழுதிய திறக்குறள் அறப்பால் உரை நூல் பவள விழா 14.03.10 ஞாயிறு அன்று தேசிய நூலக வளாக அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வ.உ. சிதம்பரனார் கோவைச் சிறையில் இருந்த போது திருக்குறளை மெய்யறம் - மெய்யறிவு என்ற சிறு கவிதை நூல்களாக்கிய வெளியிட்டார். அதன் தொடர்ச்சியான ஆய்வாக திருக்குறளுக்கு அறப்பால் உரை நூல் எழுதினார். 1935ம் ஆண்டு இந்நூல் வெளியீடு கண்டது. 50 ஆண்டுகளுக்கு மேலாக முடங்கிக் கிடந்த இந்நூல் தற்போது மீண்டும் வெளியிடப் படுகின்றது. மாணவர்களியே திருக்குறளைப் பிரபலபடுத்த, குறளொன்றினைச் சொல்லி நூலொன்றினைப் பரிசாக பெறுவீர் என்ற திட்டத்தில் மாணவர்களைக் கலந்து கொள்ளச் செய்தனர் விழாக்குழுவினர். திரளான பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திருக்குறளை ஒப்புவித்து வ.உ.சி. அவர்களின் நூலினைப் பரிசாகப் பெற்றுச் சென்றனர். தமிழகத் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் இளங்குமரனார் கப்பலோட்டிய தமிழரின் திருக்குறள் புலமை பற்றிச் சுவைமிகு சிறப்புரையாற்றினார். திரளான தமிழார்வலர்கள் கலந்து கொண்டனர். சிறப்புரையாற்றிய பெருமகனாருக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பிக்கப் பட்டது.


-நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக