சென்னை, மார்ச் 19: ""திருவண்ணாமலையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.புதிய சட்டப் பேரவையில் 2010-2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து நிதிமையச்சர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு:""கடந்த நான்கு ஆண்டுகளில் தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர், சிவகங்கை, பெரம்பலூர் மாவட்டத் தலைநகரங்களில் புதிய மருத்துவக் கல்லூரி-மருத்துவமனைகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் திருவண்ணாமலையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான விடுதிகளும், கூட்ட அரங்கும் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்படும். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள புற்றுநோய்த் துறை, உயர் மையமாக தரம் உயர்த்தப்படும். இதற்காக, ரூ.17 கோடி மதிப்பில் 150 உள் நோயாளிகள் தங்கிச் சிகிச்சை பெறும் வசதி கொண்ட புற்றுநோய் மையம் கட்டப்படும்.மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மயக்க மருந்தியல் துறை உயர் மையமாக தரம் உயர்த்தப்படும்'' என்றார் அமைச்சர் அன்பழகன்.
கருத்துக்கள்
தனியாருடன் இணைந்து மாவட்டங்கள்தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 3:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *3/20/2010 3:09:00 AM