புதன், 17 மார்ச், 2010

மிழில் மேலும் ஓர் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?தற்போதைய முடிவுகள்

தேவை -- 37.56%
தேவையில்லை -- 61.04%
கருத்து இல்லை -- 1.38%
கருத்துக்கள்

மொழியாகிய உயிருக்கு எழுத்தே உடல் என்பார் பேராசிரியர் சி.இலக்குவனார். எழுத்தாகிய உடலைச் சிதைத்தால் உயிராகிய மொழி வாழ்வது எங்ஙனம் என்றும் அவர் வினா எழுப்பியுள்ளார். இயல்பான எழுத்து வடிவம் அல்லாத கல்வெட்டு வடிவங்களைக் காட்டிப் பலர் எழுத்து காலம் தோறும் மாறி வந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் வரலாற்றுக் காலம் முதல் செம்மையாக அமைந்த நம் எழுத்து வடிவம் மாறாமல் இருந்துள்ளதை இலக்கண நூல்கள் கூறுகின்றன. (19 ஆம் நூற்றாண்டு இலக்கண நூல்தான் ஏகர ஓகார வடிவில் புள்ளிநீக்கிய மாற்றத்தைக் குறிப்பிட்டுள்ளது.) எல்லா ஒலி வடிவிற்கும் எந்த மொழியிலும் வரி வடிவம் அமைக்க இயலாது. அந்தந்த மொழியின் தன்மைகளுக்கேற்பவே வரி வடிவம் அமையும். இருப்பினும் கூடியவரை எல்லா ஒலி வடிவங்களையும் நம் தமிழ் வரி வடிவம் கொண்டு எழுதலாம். இதனை உணராமல் சிலர் கொண்டு வந்த புதிய வரி வடிவங்களே தமிழில் இருந்து பிற மொழிகள் பிறக்கக் காரணமாய் இருந்து, இமயம் முதல் குமரி வரை இருந்த தமிழ் நிலப் பரப்பு சுருங்கிப் போய்த் தமிழினம் அங்கெல்லாம் மறையக் காரணமாய் அமைந்தது. எனவே, எழுத்துகளைச் சிதைக்கும் முயற்சியை அடியோடு கைவிட வேண்டும்.

By Ilakkuvanar Thiruvalluvan
3/17/2010 6:05:00 PM

Whatever some leaders may say, there is a need to introduce certain phonetics including F , SH, SYO, Akk , EKK, MYO , TRA, FRA etc. And these SHOULD be COMPUTER- compatible and be acceptable Universally, ACROSS all PLATFORMS, irrespective of the original Nationality or the Mother-tongue or of users. There is going to be a SEM-MOZHi conference and hope these questions are suitably addressed. It seems, software experts will congregate to promote IT- based Tamil in all respects; the above and many more, including representation of milli, micro. million, billion etc - for scientific as well as in representative forms -, should be explored. Now, there no point in having many dedicated software for FONTS, owned by certain people without cross-transport for word-processing etc.

By ASHWIN
3/17/2010 3:48:00 PM

தற்போதைய சூழலுக்கு ஏற்ப ஒரு மாற்றம் அவசியம் தேவை. தந்தை பெரியார் அவர்கள் அன்றைய சூழ்நிலையில் அதிகமாக பட்டறிவு பெற்றவர். தட்டச்சு மற்றும் அச்சுத்துறையில் அன்றைய நாட்களில் இருந்த அச்சுக்கோர்க்கும் முறையில், ஏராளமான தமிழ் எழுத்துக்களை பயன்படுத்த வேண்டியிருந்தது. நடைமுறையில் பெரிய தொல்லையாக இருந்தது. இதனை தவிர்ப்பதற்காக ஒரு சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். நடைமுறையில் சற்றே சிந்தித்துப் பார்த்தால், அன்றைய சூழலுக்காக அவர் கொண்டுவந்தது, கணினி மயமான இன்றைய சூழலுக்கு ஒப்புடையதாக இல்லை. கணினியில் உள்ள மென்பொருள் வசதியை பயன்படுத்தி, ஒரு விசையை அழுத்தினால் ஒரு நீளமான வரியையே வரவழைக்க முடிகிறது. இப்படி இருக்கும்போது லை, னை போன்றவைகூட தேவையில்லாமல் பழைய எழுத்துக்களையே கூட பயன்படுத்தலாம். என்றாலும் மீண்டும் பழையதை சிந்திக்காமல், தற்போதைய கணினி பயன்பாட்டிற்கு ஏற்ப, புதிய எழுத்துக்கள் கொண்டுவர வேண்டியது அவசியமாகும். அதுவும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், எளிமையானதாகவும் இருக்க வேண்டும். தற்போது உலகளவில் இணையத்தில் எல்லா மொழிகளையும் ஒருங்கிணைக்கும் ஒருங்குறி (யூனிகோடு) முறைக்காக

By Veena
3/17/2010 9:49:00 AM

devai illai

By baskar
3/17/2010 8:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக